Saturday, June 23, 2007

கடவுள் ஒரு சந்தேகம் by தியாகு

அன்புள்ள தியாகு,

கடவுள் உருவமற்றவர்.

ஆனால் மனிதனின் மனம் எதையுமே படமாகப் பார்க்கப் பழக்கப்பட்டிருக்கின்றது.

உதாரணமாக நான் ஃபேன் என்றால் உங்கள் மனதில் F A N என்ற எழுத்துக்கள் வருவதில்லை. மாறாக ஒரு காற்றாடி விட்டத்தில் சுழல்வதே உங்கள் மனதினில் வரும்.

டைப் மெஷின் என்றவுடன் உங்கள் மனதில் டைப் மெஷின் மட்டும் வருவதில்லை. அத்துடன் டேபிள் நாற்காலியும் மனதில் வரும். சிலருக்கு டைப் அடிக்கும் மங்கையே நினைவிற்கு வரலாம்....! :) :) :)

மனம் படங்களாய் பார்ப்பதால், கடவுளையும் நம் வசதிக்கேற்ப உருவங்களாய் படைத்தோம். கல்விக்கு ஒரு சரஸ்வதி, ஹயக்ரீவர்; செல்வத்திற்கு ஒரு திருப்பதி, லஷ்மி; வீரத்திற்கு ஒரு முருகன்; விவேகத்திற்கு ஒரு கிருஷ்ணன் என அவரவர் தேவைக்கேற்ப கடவுளர்கள் உருவாக்கப்பட்டனர்.

சரஸ்வதியை எண்ணி சரஸ்வதி காயத்திரி உச்சரிக்கும் பொழுது மனம் அறிவை நோக்கி Tune செய்யப் பழக்கப்படுத்தப்படுகின்றது. பணம் வேண்டுமா...? லஷ்மியை வணங்கு.... வீரமா முருகன்... இப்படி நம் மனதினை அந்தந்த லட்சியத்திற்கேற்ப இணைக்கும் ஒரு எளிதான அருமையான உபாயமே கோவிலும் பக்தியும்.

நம் மனதில் எதை ஊறப்போடுகின்றோமோ நாம் நம்மையறியாமலேயே அதை நோக்கி நகர ஆரம்பிக்கின்றோம்.

கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பது சுத்தவெளியே. அதாவது எதுவுமற்ற ஒரு Empty Space; Absolute Free Space; Even there is no mue meson particles....But Free Space contains Planum,Power and Wisdom.

ஐன்ஸ்டீனின் ஆற்றல் நிறை சமன்பாட்டின்படி E=MC^2 ஆற்றலை நிறையாகவோ நிறையை ஆற்றலாகவோ மாற்ற இயலும். முதலிலிருந்த ஆதி நிலையானது(Empty Space) சூழ்ந்தழுத்தம் ஆற்றலால் (Self Compressive Force) வெற்றிடம் குழிந்து சுழல ஆரம்பிக்கின்றது. அது ஒரு பருப்பொருளாகக் காட்சியளிக்கின்றது. இதுவே Fundamental Particle. இதன் கூட்டே பஞ்ச பூதங்கள்.

இந்த துகளின் ஆரம் 10 ^ - 47 mm கொண்ட ஒரு நுண்துகள்,ஆற்றலானது இப்படி 10 ^ -57 விநாடிகளில் வெடித்து நிறையாக மாற்றப்படுகின்றது என Big Bang Thoery யில் படிக்கின்றோம். அப்படியே பல பருப்பொருட்கள் உருவாகி ஆற்றலின் காரணமாக இயங்க ஆரம்பிக்கின்றது. (Planum, Power, Wisdom என்ற 3 திறன்கள் இயற்கை கொண்டது என ஏற்கெனவே பார்த்திருக்கின்றோம்.)

நியூட்டனின் Law of Attraction/Repulsion Theory யின் படி F = GMm / R ^ 2 தன்னையொத்த பருப்பொருட்களை ஈர்த்தும் விலக்கியும் கொண்டு மிகப்பெரிய பருப்பொருட்களை உருவாக்குகின்றன. அவைகளுக்கிடையேயுள்ள கவர்ச்சி மற்றும் விலக்கு விசையால் ஒரு ஒழுங்கில் இயங்க ஆரம்பிக்கின்றன. அதாவது சுழல ஆரம்பிக்கின்றன.

இந்த இயக்கத்திற்கு விஷ்ணு என்று பெயரிடுகின்றனர். அந்த அமைதியான ஆதி நிலைக்கு சிவன் என பெயரிட்டனர். நீங்கள் கூட கேள்விப்பட்டிருப்பீர்கள்,, " செவனே னு இருக்றேனே.... என்னை ஏம்ப்பா வம்புக்கு இழுக்கிறே..." சிவன் ஆதி நிலை; அமைதிநிலை. மரணத்தில் அமைதியடைவதால் சிவன் அந்தப் பொறுப்பை வகிப்பதாய் சொல்கின்றனர்.

உருவாகுதல் என்று எதுவும் இல்லை; ஒன்று இன்னொன்றாகப் பரிணமிக்கின்றது. இன்னொன்றாக மாற்றமடைகின்றது. கார்ல் மார்க்ஸ் தன்னுடைய தாஸ் காபிடலில் முதல் பக்கத்தில், " இந்தப் பிரபஞ்சத்தில் மாற்றத்தைத் தவிர எல்லாமே மாறுதலுக்குட்பட்டது...." என்று சொல்கின்றார்.

ஆனால் அவர் மட்டும் Physics படித்திருந்தால், Change is also subjected into Change by means of accleration என்று புரிந்திருப்பார்.

திருவள்ளுவர் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற குரலில் அழகாய் விளக்கியிருக்கின்றார் ஆதிநிலையைப் பற்றி... இருப்பு நிலையைப் பற்றி; சிவகலத்தைப் பற்றி...

ஆனால் அதற்கு உரை எழுதிய பரிமேழலகரோ அல்லது மு.வா வோ எல்லாவற்றிற்கும் முதற்பொருள் இறைவனே எனவே அவனை வணங்குவோம் ...என சுருக்கமாக சொல்லிவிட்டனர். சரியான உட்பொருளைச் சொல்லவில்லை.

ஆனாலும் இந்தக் கடவுள் விஷயத்தில் யாருக்கும் எதுவும் முழுதுமாகத் தெரியாது என்பதே நிஜம். எனவே இதைப் பற்றியெல்லாம் அதிகமாய் கவலைப்படாமல் எப்பொழுதும் போல் இருக்கவும்...

இல்லையென்றால் நீங்களே ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துக் கொள்ளவும். யார் விளக்கம் சொன்னாலும் அது சரியாக இருக்காது. எனவே இந்த விஷயத்தில் அவரவர்களே இறைவன் என்பது யார்,...? என வினாவினை எழுப்பி ஆராய்ச்சி செய்துகொள்ளவும்...அதுதான் சரியாக இருக்கும்...

இராவணனுக்கு 10 தலைகள் என்பது 10 கெட்ட குணங்கள் என உருவகப்படுத்துவது அந்த சொல்லும் நபருக்கு எவை எவை கெட்ட குணங்கள் என நினனத்தாரோ அதில் ஒரு 10 கெட்ட குணங்களை Prioritise செய்திருப்பார்.

மூலஸ்தானம் இருட்டாகத்தான் இருக்கவேண்டும். சிவநிலைத் தத்துவத்தை விளக்க. ஆனால் இன்று ஒளிர்வது மெர்க்குரி லேம்ப் நண்பா...மெர்க்குரி லேம்ப் நண்பா....! காலப்போக்கில் நாம் தவறாகப் புரிந்துகொள்கின்றோம்.

ஆனால் என்னைப்பொறுத்தவரை கோயில் ஒரு அருமையான நம்மை நல்வழிப்படுத்தும் ஒரு நல்ல சாதனமே... எனக்கும் என் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறையவே இந்த விரதங்களும் மந்திரங்களும் என் சின்ன வயதில் நல்ல பலன்களைக் கொடுத்தது. பின்னர் யோகாவிற்கு மாறியபின் பக்தியோகத்தில் ஏனோ அவ்வளவு மனம் லயிக்கவில்லை....

ஆனாலும் நான் என் சின்ன வயதில் கடவுளர்களைப் பயத்தாலோ அல்லது மரியாதையாலோ வணங்கவில்லை... ஒரு நண்பனைப் போல்தான் பார்க்கமுடிந்தது....வேண்டுதலுக்கும் பலன் இருந்தது...

என்னுடைய ஆறாம் வகுப்பு வரை இருந்தத் திக்குவாய் பக்தி வழிபாட்டில்(வைணவம்) தொடர்ந்த பிரார்த்தனையின் காரணமாக திக்குவாய் முழுதுமாகக் குணமான அதிசயமும், சின்னவயதினில் என்னால் படிக்கவே இயலாத நிலையிலிருந்த நிலையும் மாறி நிறைய ஞாபக சக்தியும்
வேகமாகக் கிரகிக்கும் திறனும் வரப்பெற்ற அதிசயங்களும் நிகழ்ந்திருக்கின்றன. அதன்பின்னர் மேடையில் பேசி பரிசுகள் வாங்கியதெல்லாம் என்னாலேயே நினைத்துப் பார்க்கமுடியவில்லை...!

இதெல்லாம் மனோவியலின் விதிகளில் பொருத்திப்பார்த்தால் நம்பிக்கை என்ற விடை கிடைக்கின்றது.

கோயிலும் அதன் கான்செப்ட்டும் மூட நம்பிக்கையாகவே இருக்கட்டும். அதனால் நன்மைகள் நிகழ்ந்தால் சரிதான். நிகழாவிட்டாலும் அதனால் ஒன்றும் நட்டமில்லை.

மூடநம்பிக்கையாய் இருக்கும் பலியிடல் போன்றவைகளைத் தவிர்க்கலாம்.

இவையெல்லாம் என் நம்பிக்கைகளே...இவையெல்லாம் சரியாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை.

ஒருவனுக்கு சரியாக இருப்பது இன்னொருவருக்கு சரியாக இருப்பதில்லை. எல்லாம் Frame of reference... சமுதாயத்திற்கு தீங்கு செய்யும் ஒரு மிகப்பெரிய கொடியவனை நான் கொன்றால் அது கொலை என்று சட்டம் எனக்குத் தண்டனை அளிக்கும்; இதே இரவீந்திரன் இராணுவத்தில் சேர்ந்து போரில் எதிரிநாட்டைச் சார்ந்த முகம் தெரியாத எதிரிகளை 1000 பேர்களைக் கொன்றால் வீரன் என்று கெளரவிக்கின்றது...

மொத்தத்தில் கொலை கொலைதான். ஒரு உயிரைக் கொன்றால் தூக்கு; 1000 பேரைக்கொன்றால் பதக்கம்....எல்லாம் Frame of Reference...! மனிதன் இந்த மாயையில் சிக்குண்டதால் அவனால் உண்மையான மெய்ப்பொருளைக் காண முடிவதில்லை....

எப்பொருள் யார்யார்வாய்க்கேட்பினும் மெய்ப்பொருள் காண்போம்...

No comments: