reply-to muththamiz@googlegroups.com
to muththamiz@googlegroups.com
date Jun 7, 2007 6:16 PM
subject [muththamiz] Re: ஒரு ஆசிரியன் கற்றது
mailed-by googlegroups.com
சுரேஷ்
கல்வித்துறையில் நிலவும் வருத்தமான நிலவரம் இதுதான்....ஆசிரியர் நிலவரம் இன்று மிக வேதனையான விசயம்.. மற்ற பலதுறைகளில் இதே போல்தான் நடக்கிறது. மனிதவளத்தை இப்படி துச்சமாக நினைத்தால் அவன் ஏன் வெளிநாட்டுக்கு ஓடமாட்டான்??
On 6/7/07, sweetsuresh <> wrote:
2003ல் கடுமையான வறட்சி வந்து வருமானத்துக்கே வழி இல்லாம நான்
பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைக்கு முயன்ற போது எனக்கு அவர்கள் தர
ஒப்புக் கொண்டது வெறும் 1500ரூ மட்டுமே. அதிலும் தினமும் 30 கிலோமீட்டர்
நான் சென்று வரவேண்டி இருந்தது.
நான் ஒரு 2000 மாவது கொடுங்கள் என்றபோது 1500க்கே நிறையபேர் தயாரா
இருக்காங்க. நீங்க நல்லா நடத்தறீங்கன்னுதான் உங்க தேர்வு
பண்ணியிருக்கிறோம் அப்படின்னாங்க.
-சுரேஷ்பாபு
On Jun 7, 9:47 am, "செல்வன்"
> தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு கிடையாது. சம்பளமும் குறைவு.
--
செல்வன்
http://groups.google.com/group/muththamiz
தனிமடல் தொடர்புக்கு: holyape@gmail.com
--~--~---------~--~----~------------~-------~--~----~
- Show quoted text -
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---
Reply Forward Invite செல்வன் to chat
விஜி சுதன் செல்வன் அண்ணா, உங்க கதையைப்பார்த்தால் திரைப்படங்களில் எல்லாம் மிகைப்படக் காட்...
8:14 pm (3 hours ago)
Reply
Reply to all
Forward
Add Raveendran to Contacts list
Delete this message
Report phishing
Show original
Message text garbled?
Raveendran Krishnasamy to muththamiz
show details 11:16 pm (4 minutes ago)
On 6/7/07, விஜி சுதன் <> wrote:
நானும் அப்படி அல்லவா நினைத்திருந்தேன்....உங்க கதையெல்லாம் கேட்கும் போது தப்பிச்சோம்டா சாமின்னு இருக்கு" ஏனெனில் ஆசிரியர் தொழில் நான் மிக நேசிக்கும் மதிக்கும் தொழில்...
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஆனால் நான் ஆசிரியர் தொழிலை துளித்துளியாய் ரசித்து அதுவே ஒரு ஜென் மெடிட்டேஷன் மாதிரி பண்ணினேன்... பாடம் நடத்துவதில் நேரம் போவதே தெரியாமல் மாணவர்களே லயித்துப் போயினர்.
எந்த மாணவ மாணவிகளாவது பெளதிகத்திற்கு ஸ்பெஷல் கிளாஸ் வைக்கச் சொல்லிக் கேட்டிருக்கின்றீர்களா....?
ஆனால் என் மாணவர்கள் அவ்வளவு ஆர்வமாய் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட பாடம் நடத்தும்படி மிகவும் ஆசையாய் கேட்டுக்கொண்டனர்.
பாடமே அவர்களுக்கு ஒரு சினிமா டைரக்டர் தன் படத்தை எப்படி டைரக்ட் பண்ணுவாரோ அது போல் முன்னிரவு நல்ல ஹோம் ஒர்க் பண்ணிவிட்டு நானே என் சொந்த செலவில் Teaching Aids மாதிரிகளை உருவாக்கி நடத்தியதில் நல்ல பலன்....
துறைத் தலைவர் இரத்தினசாமியின் உண்மையான ஆர்வமும் உற்சாகமும் பல்கலை ரேங்க்குகள் வரிசையாகக் குவிய காரணமாக அமைந்தது.
எம்.ஐ.டி.யில் B.Sc Physics/Maths/Chemistry முடித்தவர்களுக்கு மட்டுமே அப்பொழுது B.Tech admission அங்கே இருந்தது...
எங்கள் கல்லூரியில் பெளதிகத் துறைக்கு மட்டுமே அங்கே வருடா வருடம் தனியாக ஒரு கோட்டா உருவாக்கியது போல் எங்கள் மாணவர்கள் அங்கே எளிதாக சென்றைடவர்.
துறைத் தலைவரைவிட நான் பாடம் நடத்துவதில் மாணவர்கள் அதிகமாய் ஆர்வம் காட்டலானார்கள். எந்த வாத்தியாராவது வராவிட்டால் என்னை அழைத்துச் சென்று அறிவியலைப் பற்றி பேசச் சொல்வார்கள்.
நானும் இதுதான் சமயம் என பிரபஞ்ச இயக்கத்திலிருந்து எடுத்துவிடுவேன். ஆகாயம், விண்வெளி, கோள்கள், பால்வளி மண்டலம், ஆண்ட்ரமீடா கேலக்ஸி, எம்80, எ89 காலக்ஸி, இந்தப் பிரபஞ்சத்தில் நாம் மட்டும்தான் இருக்கின்றோமா....? நாம் பிறப்பிற்கு முன்னால் எங்கிருந்தோம்...? மரணத்திற்குப் பின் நிலை என்ன...? உயிர் என்றால் என்ன...? இப்படி படிப்படியாக சுவாரஸ்யமாக யோகா தவம் என்று கொண்டு வந்துவிடுவேன்...
ஏறக்குறைய என் மாணவ மாணவிகள் என் தாக்கத்தின் காரணமாக சினம் கொள்வதைத் தவிர்த்தனர். நட்பு நலம் பாராட்டினர். வீட்டில் கூட அவர்களது பெற்றோர்கள் என்னைத் தனியாகத் தேடி வந்து, "என் பையன் இப்போ ரொம்ப நல்ல பையனா மாறிட்டான்... உங்களைத் தான் சொல்றான்" என்றோ அல்லது "என் பொண்ணு இப்போ அம்மாவுக்கு சொல்லாமலே ரொம்ப உதவி செய்றா...நல்ல மாற்றம்..." என்றோ சொல்லிப் பாராட்டிவிட்டுச் செல்லும்பொழுது, "அட நம்மால் கூட 4 பேருக்கு ப்ரயோஜனமா இருக்கும் போலிருக்கே.." ன்னு ஒரு நோபல் பரிசு கிடைச்ச சந்தோஷம் கிடைக்கும்...
Science Forum ஒன்னு ஆரம்பிச்சி மாணவ மாணவிகளை முழுமையாக ஆராய்ச்சி மனப்பான்மைக்கு மாறி ஏன் எதற்கு எப்படி என்று கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் எங்கள் ஊரில் எங்கள் பேராசிரியர்களின் உதவியால் தொடங்கி வெவ்வேறு துறையைச் சார்ந்த வெவ்வேறு கல்லூரி பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் என ஒரு பெரிய பரபரப்பே பண்ணினோம்...
சென்னையிலுள்ள சில Film Society யில் மெம்பராகி விஞ்ஞான ஆராய்ச்சி டாக்குமெண்டரிகளை Audio-Visual Education என்னும் துறையையும் கையெலெடுத்துக்கொண்டு அங்கே மாதத்திற்கு இரண்டு மூன்று படங்களைத் திரையிட்டோம்....
அது ஒரு கனாக் காலம்....!
அருப்புக்கோட்டை மாணவ மாணவிகளும் எனக்கு நல்விதமாய் ஒத்துழைத்தனர். ஆனால் சென்னையில் நேர் எதிரான அனுபவம் ஏற்பட்டது.
அதுவே என்னை மேலே மேல் படிப்புப் படிக்கத்தூண்டி எண்ட்ரன்ஸ் எக்ஸாமில் நல்ல ஸ்கோர் வாங்கி சீட் பிடிக்க தூண்டுகோலாய் அமைந்து கணணித் துறைக்கு இழுத்துச் சென்றது....
இப்பொழுதும் எனக்குக் கணிப்பானியலைவிட பெளதிகமே ஆழ்மனதில் அமர்ந்திருக்கின்றது... இப்படித்தான் நமக்கு எது பிடிக்கின்றதோ அதில் ஈடுபட முடியாமல் கேவலம் சமுதாய ரெக்ககனைசைனுக்காக நாம் தடம் புரள வேண்டியிருக்கின்றது.....!
பேராசானுக்குரிய ஒரு மதிப்பும் முழு ஊதியமும் வேலை நிரந்தரமும் இருந்திட்டால் நான் ஏன் சிலிக்கான் வேலிக்குப் பயணிக்கப்போகின்றேன்...?
சிவசிவா என்று
Properties of Matter by Raveendram Krishnasamy
Heat and Thermodynamics by Raveendran Krishansamy
Electro Magnetic Theory by Raveendran Krishansamy
ABC of Electronics by Raveendran Krishanasamy
Introduction to Micro Processor by Raveendran Krishnasamy
Computer Organisation and Assembly Language Programming by RK
Industrial Electronics by Raveendran Krishnasamy
Physics in Day to Day Life by Raveendran Krishnasamy
Plasma Physics by Raveendran Krishnasamy
என்று எத்தனையோ புத்தகங்கள் படைத்திருப்பேனே.... ! என்றாவதொரு நாள் படிப்படியாய் ஐன்ஸ்டீனாய் மாறி உலகையே திரும்பிப்பார்க்க வைத்திருப்பேனே...!
நாலு பேருக்காக நாம் தடம் புரள வேண்டியிருக்கின்றது....வீட்டிலோ அமெரிக்காவில் பணம் சம்பாதிப்பதையே பிறவிப்பயனாய் கருதும் சமுதாயம்... அவ்வளவு ஏன் கல்யாணத்திற்குப் பெண் பார்க்கும் போது கூட பையன், "அமெரிக்காவா....?"
என்ன உலகமடா இது... நான் நல்லவன்; குடி இல்லை; சிகரெட் இல்லை; சூதுவாது இல்லை; கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லை; கெட்ட எண்ணங்கள் எதுவும் இல்லை என்றால் தரகன் கூட ,"இது தேறாத கேஸ்..." என கமெண்ட் அடிக்கின்றானே....?
அட நான் எதையோ ஆரம்பித்து எழுத்து கன்னாபின்னா வென எங்கெங்கோ கட்டுப்பாடின்றி செல்கின்றதே....?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>..
On
--
என்றென்றும்
சுதனின் விஜி
--~--~---------~--~----~------------~-------~--~----~
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---
- Hide quoted text -
--
அன்புடன்
சக பயணி
ரிஷி ரவீந்திரன் www.rishiraveendran.tk
"Yadbhavam....thadbhavathy....."
"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்..."
"Yadrusee Bhavanayasya....Siddirbhava thadrusee...."
"நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது......."
"Ya mathigi...Sa gathigi...."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."
No comments:
Post a Comment