Sunday, February 18, 2007

எல்லோரையும் திருப்திப்படுத்துவது எப்படி...?

On 2/18/07, Raveendran Krishnasamy wrote:

On 2/18/07, Viji wrote:
விளக்கம் த்ந்த நாயன்மாருக்கு மிகுந்த நன்றி...

ரவி அண்ணா, அந்த அத்தனை மந்த குணங்களையும் தானமாகக் கொடுத்தாலே நாம் மிகுந்த நல்லவர்களாகி விடுவோம்.

ஆனால் பல சமயங்களில் தர்ம சங்கடம் என்பார்களே அப்படியான நிலைகள் ஏற்படும் போது எல்லோரையும் திருப்திப் படுத்த முடியாதே!!.

>>>>>>>>>> Rishi's Reply

நம் அகமே புறம் தொடரில் உயர்தர வாழ்வு அத்தியாயம் (சென்ற மடலில் வெளியானது) மூன்றாம் பாடத்தில் அசையாத நடுநிலை என்று ஒன்றைக் குறிப்பிட்டுள்ளேனே...?

எல்லோரையும் திருப்திப்ப்டுத்திக்கொண்டிருந்தால் நீங்கள் வந்த நோக்கம் நிறைவேறுமா...? அதுவும் சரியாக இருக்காது....எல்லைகள் மாற மாற எல்லாமே மாறுகிறது....

மது அருந்துவது உடல்நலத்திற்குத் தீங்கானது என்று சொல்லிக்கொண்டே மதுக்கடைகளை அரசாங்கமே நடத்தி 'குடி'மக்களைத் திருப்திப் படுத்திக் கொள்வதைப்போல;

சினிமாவில் சிகரெட் பிடிப்பது தடை; ஆனால் சிகரெட் விற்பது தடையல்ல.

இப்படி சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இருந்தால் அவரின் நட்பைத் தொடரவேண்டாம். எச்சரிக்கையாய் இருங்குள்....

என்ன உங்களுக்கு நட்பு வட்டாரம் குறையலாம்; அதனால் ஒன்றும் இழப்பு இல்லை... லாபம்தான்...

இறை நிலையுடன் மட்டும் நிலைத்திருங்கள்...


>>>>>>>>>>>>

Viji's query...

ஒருவருக்கு நல்லதெனில் இன்னொருவருக்கும் அதனால் நன்மை ஏற்படும் பட்சத்தில் சரி"...ஆனால் எதிர் மறையான விளைவுகளைக் கொண்டுவரும் சூழலுக்குள் நீங்கள் சிக்கியதில்லையோ என்னவோ? !! எனக்கு பல நேரங்களில் அப்படி நேர்ந்திருக்கின்றது....!!...

அதனால் தான் அப்படிக் கேட்டேன். ...! .

>>>>>>>>>. Rishi's Reply

எல்லா மனிதர்களும் சிக்கலில் சிக்கிக்கொள்ளத்தானே வேண்டும்... உடலில் உயிர் சிக்கிக்கொண்டிருக்கும் வரை சிக்கல்கள் தொடர்வது சகஜமே...அதிலிருந்து மீண்டு வருவது தவ வலிமையால் (இறையருள்) மட்டுமே முடியும்.
<<<<<<,

No comments: