Sunday, February 18, 2007

எல்லோரையும் திருப்திப்படுத்துவது எப்படி...?

On 2/18/07, Raveendran Krishnasamy wrote:

On 2/18/07, Viji wrote:
விளக்கம் த்ந்த நாயன்மாருக்கு மிகுந்த நன்றி...

ரவி அண்ணா, அந்த அத்தனை மந்த குணங்களையும் தானமாகக் கொடுத்தாலே நாம் மிகுந்த நல்லவர்களாகி விடுவோம்.

ஆனால் பல சமயங்களில் தர்ம சங்கடம் என்பார்களே அப்படியான நிலைகள் ஏற்படும் போது எல்லோரையும் திருப்திப் படுத்த முடியாதே!!.

>>>>>>>>>> Rishi's Reply

நம் அகமே புறம் தொடரில் உயர்தர வாழ்வு அத்தியாயம் (சென்ற மடலில் வெளியானது) மூன்றாம் பாடத்தில் அசையாத நடுநிலை என்று ஒன்றைக் குறிப்பிட்டுள்ளேனே...?

எல்லோரையும் திருப்திப்ப்டுத்திக்கொண்டிருந்தால் நீங்கள் வந்த நோக்கம் நிறைவேறுமா...? அதுவும் சரியாக இருக்காது....எல்லைகள் மாற மாற எல்லாமே மாறுகிறது....

மது அருந்துவது உடல்நலத்திற்குத் தீங்கானது என்று சொல்லிக்கொண்டே மதுக்கடைகளை அரசாங்கமே நடத்தி 'குடி'மக்களைத் திருப்திப் படுத்திக் கொள்வதைப்போல;

சினிமாவில் சிகரெட் பிடிப்பது தடை; ஆனால் சிகரெட் விற்பது தடையல்ல.

இப்படி சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இருந்தால் அவரின் நட்பைத் தொடரவேண்டாம். எச்சரிக்கையாய் இருங்குள்....

என்ன உங்களுக்கு நட்பு வட்டாரம் குறையலாம்; அதனால் ஒன்றும் இழப்பு இல்லை... லாபம்தான்...

இறை நிலையுடன் மட்டும் நிலைத்திருங்கள்...


>>>>>>>>>>>>

Viji's query...

ஒருவருக்கு நல்லதெனில் இன்னொருவருக்கும் அதனால் நன்மை ஏற்படும் பட்சத்தில் சரி"...ஆனால் எதிர் மறையான விளைவுகளைக் கொண்டுவரும் சூழலுக்குள் நீங்கள் சிக்கியதில்லையோ என்னவோ? !! எனக்கு பல நேரங்களில் அப்படி நேர்ந்திருக்கின்றது....!!...

அதனால் தான் அப்படிக் கேட்டேன். ...! .

>>>>>>>>>. Rishi's Reply

எல்லா மனிதர்களும் சிக்கலில் சிக்கிக்கொள்ளத்தானே வேண்டும்... உடலில் உயிர் சிக்கிக்கொண்டிருக்கும் வரை சிக்கல்கள் தொடர்வது சகஜமே...அதிலிருந்து மீண்டு வருவது தவ வலிமையால் (இறையருள்) மட்டுமே முடியும்.
<<<<<<,

Saturday, February 17, 2007

குரு தக்ஷிணை

On 2/17/07, Viji wrote:
ரவிஅண்ணா,,,,,,

புன்மொழி/ புண்மொழி !! எதுசரி.....?!!!....குதர்க்கம் என்பது எதற்குமே உதவாது!

Rishi's Reply >>>.>>>>> அன்புள்ள சகோ,

சுடுசொற்கள் என்ற பொருளில் எழுதினேன். எனக்கும் இதில் குழப்பமே. புண் (injury) என்ற சொல்லை வைத்து சொல்கிறீர்கள். பெரியவர்களே இதை யாராச்சும் தீர்த்துவிடுங்கள்.... <<<<<<<<<<<<<<<<<<<<<

Viji's query
ஆனால் இந்த உலகத்தில் இருந்து கொண்டு....வஞ்சகம் நிறைந்த வலைக்குள் அகப்பட்டுக் கொண்டு இவைகள் அனைத் தையும் கடைப்பிடிப்பது சாத்தியமா?!!.....கொஞ்சம் விளக்குவீர்களா?!!!

Rishi's Reply >>>.>>>>>

வஞ்சகம் நிறைந்த உலகம்...? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.

பாதைகள் முழுதும் கற்கள்தான்
பார்த்து நடக்கவேண்டியது நாமன்றோ....?

அதற்குத் தெளிவான, விசாலமான மனம் மட்டுமே தேவை.

நாம் தொடர்ந்த மறதியில் இருக்கிறோம்.

நாம் எப்பொழுது நம்மை மறக்கிறோம்...?

தூக்கத்தில்...

கனவு எப்பொழுது வரும்...?

தூக்கத்தில்

விழிப்பு நிலையில் கனவு கலைகிறது. நினைவின்மை கலைகிறது...

தூக்கம் விரட்டி விழிப்பு நிலையைக் கைப்பெறவேண்டும்....

எப்பொழுதும் விழிப்பு நிலை கைப்பெற வேண்டும். இது கைவரப்பெற்றால் ஒரு மனிதன் ஜெயிலில் இருந்தால் கூட அந்த சூழ்நிலையையே மாற்றும் வல்லமை கொண்டவர்களாக செயல்படுகின்றனர். சூழ்நிலையை தங்களது அகத்தால் மாற்ற வல்லவராவார்கள் இவர்கள்.

அப்படிப்பட்டவர்களில் ஒரு சிலர் வ.உ.சி, காந்தியடிகள், வினோபா என்று ஒரு பட்டியலே இருக்கிறது....அந்தப் பட்டியலில் சமீபத்தில் அருட்தந்தை வேதாத்திரி அவர்கள்....மிகப் பெரிய ஞானி...

நான் ஜேம்ஸ் ஆலனைப் பார்த்ததில்லை; வள்ளுவரைப் பார்த்தில்லை;
வ.உ.சி,வினோபா இவர்களுடன் பழகும் வாய்ப்பும் இல்லை. ஆனால் வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் பழகும் அருமையான வாய்ப்பு கிட்டியது....!

அவர் என்னிடம் கேட்ட காணிக்கை என்ன தெரியுமா....?
பேராசை, கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, சினம், வஞ்சினம் ஆகிய இந்த 6 தீய குணங்களையும் என்னிடமிருந்து தனக்குத் தானமாகக் கொடுக்கும்படிக் கேட்டார்....

குரு தக்ஷிணையில் கூட தன்னலம் கருதாத பொது நலம் கருதும் பெரியவர்கள்....வள்ளுவரை இவரின் மூலம் தரிசிக்கும் வாய்ப்பு....
அந்த மகான் வாழ்க வளமுடன்...

<<<<<<<<<<<<<<<<<<<<<

Tuesday, February 13, 2007

தேவசேனா ஆட்டோகிராஃப்

On 2/13/07, gnaniyar rasikow wrote:



இந்தக்குளத்தில் காதல் எறிந்தவர்கள் (10)

ஒரு தலைக் காதல்

எனது கல்லூரியில் படித்த அந்தப்பெண்ணிற்கு பூர்வீகம் செங்கோட்டை. அவளது தந்தை
அரசாங்க அலுவலராக திருநெல்வேலியில் வேலைபார்த்து வந்ததால் இங்கேயே அவளது குடும்பம் செட்டிலாகியது. அவளது பெயர் சமானா.

அவளது கல்லூரியில் படித்த ஒரு சீனியர் பையனை நேசித்தாள். அந்தச் சீனியர் பையன் பெயர் சுபைர். அவன் கல்லூரியில் கவிதை மேடைப்பேச்சு இலக்கியப்பற்றோடும் கிண்டல் - கேலி என்று விளையாட்டுத்தனமாகவும் திரிந்தவன்.

அந்த ஆட்டோகிராப் கூட அவனிடம் நேரடியாக சென்று வாங்க முடியாமல் தன் வகுப்பு தோழனை விட்டு தான் யாரென்று காட்டிக்கொள்ளாமல் வாங்கியிருக்கிறாள்.

>>>>>>>>>>Rishi' Reply இந்த இடத்தில் என் கல்லூரி வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்....

நாம் கல்ல்லூரியின் முதலாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருந்தேன். ஏனோ தெரியவில்லை என் சிறு வயதிலேயே என்னை அறியாமல் பெளதிகத்தில் அளப்பரிய ஆர்வம். + 2 ல் பெளதிகத்தில் நிறைய ஆராய்ச்சிகள் செய்திருந்தேன்....பொறியியல் வேண்டாம் (?) என்று கூறிவிட்டு என் விருப்பப் பாடமான இயற்பியலை நிஜமாகவே நேசத்துடன் எடுத்து பயின்றேன்....

உதாரணமாக ஒரு செமஸ்டரில் Heat and Thermodynamics என்ற ஒரு பேப்பர். அதில் Heat க்கும் Temperature க்கும் உள்ள வேறுபாடு என்ன என்று ஆழ்ந்து ஆராய்ச்சி பண்ணியதில் D.S.Mathur ம் Brijlal Subrahmanyam ம் ஆடிப்போனார்கள். (அந்த செமச்டர் முழுக்க இப்படியே ஆராய்ச்சிசெய்ததலால் தேர்வில் மார்க் போனது என்பது சொல்லியா தெரியணும்...?)

கோவிலும் பெளதிகமும், கராத்தேக் கலையும் பெளதிகமும், இப்படி நிரைய ஆராய்ச்சி செய்து Physics Association ல் உரையாற்றியதில் அந்த பல்கலை முழுதும் பிரபல்யமானேன்....

இளம் விஞ்ஞானி என்றும், Hi Scientist என்றும் ,"இதோ ஐன்ஸ்டினோட வாரிசுடா...." என்றும் அழைக்கப்பட்டேன்....

முதலாம் ஆண்டு முடியும் தருவாய்.
நானும் என் நன்பர்களும் Physics Lab க்குக் கீழே நின்றுகொண்டு Meissner Effect எப்படி Super Conductivity யில் அற்புதமாய் வேலை செய்கிறது என்று விளக்கிக்கொண்டிருந்தேன்....

அப்பொழுது என் வகுப்பறைத் தோழி ஒருத்தி இன்னொரு பெண்ணுடன் எங்களை நோக்கி வந்தாள்.

(நானும் ஒன்னாப்ல இருந்து கடேசியா படிச்ச பெரிய படிப்பு வரைக்கும் எல்லாமே Co-Ed ன்னாலும் ஒரு தடவ கூட எந்தப் பெண்ணோடயும் (College வரைக்கும் தான்) பேசினதே இல்லை...ஏன்னா அப்டியே வளத்துத் தொலச்சிட்டாங்க. என்ன பண்ண...? (அப்றமா மேல படிக்க Univ அப்றம் அதுக்கு மேல ஒரு Ph.D join பண்ணி டிஸ்கண்ட்யூ பண்ணி அப்றம் அதுக்கு மேல ஒரு பெரிய இடத்ல படிப்பு ன்னு போனப்பதான் சரி பெண்களோட பேசலாம் போல.... ன்னே தெரிஞ்சது. ஆனாலும் கூச்சம் மட்டும் போகவே இல்லை... கொஞ்சம் பரவாயில்லாம முன்னேறியாச்சி...

அங் கதைய எங்க விட்டேன்....?

என்னோட கிளாஸ்மேட் பொண்ணு, "இந்த அக்கா உங்களோட பேசணுமாம்.." னு இங்கிலிபீசுல ரொம்ப ஸ்டைலா சொல்லிச்சு.

அவங்கள நான் பாத்த மாதிரியே ஞாபகமில்லை.

கிளாஸ்மேட் பொன்ணுதான், " இவங்க III Year Maths. உங்க ஆட்டோகிராஃப் வேணுமாம்...'னு சொன்னாங்க. எதோ பேர் சொன்னாங்க..சரியா எனக்கு சுழயல்ல.

எனக்கோ ஒரே உற்சாகமும் படபடப்புமா இருந்துச்சு.... பசங்க எல்லாம், "மாப்ளே உனக்கு மச்சம் டா...." னு சொன்னாங்க...

நானும் அவங்க ஆட்டோகிராஃப் ல ," முகம் நக நட்பது நட்பன்று; நெஞ்சத்து அகம் நக நட்ப்தே நட்பு..." னு எழுதினேன். (இது மட்டும் இன்னும் பசுமையா ஞாபகம் வருது...)

அடுத்த செமஸ்டர் வரைக்கும் ஏன் ஃபைனல் வரைக்கும் வாத்தியார் வரைக்கும் ஒரே கேலிதான்...!






கணக்கும் பெளதிகமும் எனக்கு இலகுவாக இருந்தன. படிக்காமலேயே மார்க் வாங்கக்கூடிய பாடங்கள். என்னைப் போல சோம்பேறிகளுக்கு அதுதான் எளிது.

கிராமத்திலிருந்து தமிழ் மீடியம் படித்து வந்தவன். கல்லூரியில் நுழையவும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எல்லாம் ஆங்கிலம். தமிழிலும் ஆங்கிலத்திலும் நாந்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட்...(!?). ஆனாலும் இவர்கள் ஆங்கிலத்தில் பண்ணும் அலப்பறை என்னை வெகுவாய் கவலையடையச் செய்தது....
- Hide quoted text -
>>>>>>>>>>>>......



பின் அந்த சுபைரும் சுமார் ஒரு வருடம் கழித்து அந்த கல்லூரிக்கு ஒரு கவிதைகள் விழா சம்பந்தமாக வந்தபொழுது தன் காதல் சொல்லும் தருணம் இதுதானென்று நினைத்து அவனிடம் தன் வகுப்புத் தோழர்கள் மூலமாக அவள் தன் காதலைத் தெரியப்படுத்த சுபைர் திருப்தியளிக்கும் விதமாய் அவளுக்கு பதிலளிக்கவில்லை.


அவளுடைய காதலின் தீவிரம் அறிந்து அவளது வகுப்புத் தோழன் சுபைரிடம் வந்து அவள் அவனைத் தீவிரமாக விரும்புவதாகவும் உணரச்சிவசப்பட்டு தவறாக முடிவு கூட எடுத்துவிடக்கூடும் என்றும் கூறி சுபைரை அவள் சந்திக்க விரும்புவதாகவும் கூறினான்.

ஆனால் சுபைரோ இன்னொரு பெண்ணை காதலித்துக் கொண்டிருக்கின்றான் அவளிடம் தன் காதலை வெளிப்படையாக சொல்ல முடியாமல் தவிப்புகளில் போராடிக் கொண்டிருந்தான்

காதலை எடுத்துச் சொன்னால்
மறுத்திடுவாளோ என்று
அவள் காதலிப்பாள் என்ற
கற்பனையிலேயே
உயிர்வாழ்கின்றான்.

அந்தச் சூழ்நிலையில் அவனுக்கு தெரியாலையே ஒரு பெண் அவனை தீவிரமாக காதலிப்பது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

காதலித்த பெண்ணுக்காய்
காத்திருந்தான் !
காத்திருந்து ஒருத்தி
காதலித்தாள் !

சுபைரும் அவளை ஒரு நண்பனின் வீட்டில் வைத்து சந்தித்து தான் வேறொரு பெண்ணைக் காதலிக்கின்றேன் என்று முகத்திற்கு நேராக கூறினால் எங்கே மனமொடிந்து தவறான முடிவு எடுத்து விடுவாளோ என்று அவளிடம் நாசூக்காக தனக்கு பல பொறுப்பு இருப்பதாகவும் ஆகவே வாழ்க்கையில் செட்டில் ஆக நாட்கள் ஆகும் எனவும் சில சால்ஜாப்பு காரணங்களை கூறி காலம் சம்மதித்தால் பார்ப்போம் என்று தெளிவாய்க் குழப்பி விட்டு சென்றுவிட்டான்.

பின் வெளிநாட்டில் சுபைருக்கு வேலை கிடைத்துவிட அவன் பறந்துவிட்டான். ஆனால் சமானாவின் காதலோ கசாப்புக்கடைக்குள் சிக்குண்ட ஆடாய் தவித்துக்கொண்டிருந்தது.

சுபைர் சொல்லிவிட்டுப்போன - காலம் சம்மதித்தால் பார்க்கலாம் - என்ற ஒற்றை வார்த்தைகளை வைத்துக்கொண்டு அவன் தன்னை காதலிப்பதாக நினைத்துக்கொண்டு அவனது வீட்டிற்கு தொலைபேசி அடிக்கடி செய்து பேசியிருக்கின்றாள் சுபைரின் நண்பனிடம் அவன் எப்பொழுது திரும்பி வருவான் என்று நச்சரித்திருக்கிறாள்.

இதற்கிடையில் சமானாவின் வீட்டில் அவளின் திருமண ஏற்பாடு செய்யப்பட்டபொழுது அதனை ஒதுக்கி வீட்டில் உள்ளவர்களிடம் உண்மையைக் கூற அவர்களோ சமானாவை அவமானப்படுத்தி அவளின் கண்ணீரை ஒட்டு மொத்தமாய் உருவியிருக்கின்றார்கள். அவளும் முடிந்தவரை போராடியிருக்கின்றாள். சுபைரை தொடர்பு கொள்ள அவளால் முடியவில்லை.

இறுதியாக அவள் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்ய சம்மதித்திருக்கின்றாள். இன்னும் 2 மாதங்களில் அவளுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது.

கடைசியாக அவள் சுபைருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கின்றாள்.

வாழ்வின் எல்லா சந்தர்ப்பத்திலும் சுபைரைக் காண விரும்பியவள்
தன் வாழ்நாளில் இனிமேல் எந்த சந்தர்ப்பத்திலும் இறந்து போனால் கூட அவனை சந்திக்கவே விரும்பவில்லை என்று கடிதம் எழுதி யிருக்கின்றாள்.

சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வந்த சுபைர் அதனை படித்து மிகவும் நொறுங்கிப்போய்விட்டான். தன்னால் ஒரு பெண் இந்த அளவிற்கு மனம் கொதித்துப் போயிருக்கின்றாள் என்பதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளைக் கண்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என துடித்திருக்கின்றான் .

ஆனால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள அவளை மறுபடியும் சென்று சந்திப்பது புத்திசாலித்தனமல்ல என நினைத்து அமைதியாயிருந்திருக்கின்றான் மனதில் எழுந்த காயங்களின் சுனாமி அலைகளை தனக்குள்ளே வாங்கிக்கொண்டு..

அவள் தவறான முடிவு எடுத்துவிடக்கூடாதென்று அவளின் காதலை நாசூக்காய் தவிர்த்த சுபைரின் மீது தவறு இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவன் அந்தப் பெண்ணிடம் தான் இன்னொரு பெண்ணைக் காதலிப்பதாக முதலிலையே கூறியிருந்தால் அவள் தனது காதலை இந்த அளவிற்கு வளர்த்திருக்கமாட்டாள்.


விளையாடிக் காதலியுங்கள்
தயவுசெய்து
காதலோடு விளையாடாதீர்கள்
(இன்னமும் காதலிப்போம்)

- ரசிகவ் ஞானியார்




--
K.Gnaniyar
Dubai
www.nilavunanban.blogspot.

Sunday, February 11, 2007

காதல்

On 2/11/07, vishalam raman wrote:
தந்தை தினம் வருகிறது பல பேர்களுக்கு அதூ வந்து போவதே தெரிவதில்லை , தாய்
தினம் வருகிறது கொஞ்சம் தொலைக்காட்சி மூலமாய் தெரிந்தாலும் "அம்மாவென்றழைகாத
உயிரில்லையே "என்பது போல் ஒரிரண்டு பாட்டுக்களுடன் முடிவடைகின்றன,ஆனால்
இந்தக் காதலர் தினம் ஒரு பத்து நாட்கள் முன்பாகவே சூடு பிடிக்கத் தொடங்கி ஒரு கலக்கல்
கலக்கி விடுகிறது அது ஏன்?

rishi's reply

>>>>>>>>>>>> எனக்கு எந்த ஒரு தினமும் வருவது தெரிவதில்லை. இன்றைய தினம் எப்படி போகும் என்பது மட்டுமே தெரிகிறது. E.Tolle சொல்வது போல் இன்றைய கணத்தில் மட்டுமே கவனம் இருப்பதால் இப்பொழுதில் மட்டுமே கவனம் இருப்பதால் இந்த தினங்களைக் கண்டாலே எனக்கு சிரிப்புத்தான் வருகிறது....

vishalam raman wrote:
நம் நாடு பெற்றோர்களைத் தெய்வமாக மதிக்கும் நாடு தாய் தந்தையைப் பராமரித்து கடைசிவரை அவர்களை பாசத்துடன் பார்த்துக்
கொள்ள வேண்டியது மக்களின் கடமை ஆகையால் தனியாக தாய்,தந்தை தினம் தேவையே

rishi's reply

>>>>> இதெல்லாம் வெள்ளைக்காரனின் ஸ்டைல். அவர்கள் குடும்ப அமைப்பு அப்படி... நாமும் அதை ஏன் கடைபிடிக்கவேண்டும்....? நாம்தான் தினமும் தவம் செய்யும்பொழுது ,

"அன்னைக்கு வணக்கம், தந்தைக்கு வணக்கும், அருள்மிகு ஆசானுக்கு வணக்கம்..." என்று வணங்கிவிட்டுத்தானே அன்றைய நாட்பொழுதைத் துவக்குகிறோம்...? தினமும் பலமுறை அன்னை தந்தையர்களை வணங்குகிறோமல்லவா...?

vishalam raman wrote:

இல்லை நம் மனத்தில் தினமும் அவர்கள் குடியிருக்கிறார்கள் மேல் நாட்டினிலே மகன் ,மகள் 16 வயது வந்தால் தனியாக குடி போகிறார்கள் ,அவர்கள் சுதந்திரத்தில் ஒருவரும் தலை இடுவதை அவர்கள் விரும்புவதில்லை ,,ஆகையால் இந்தத் த்ந்தை தினம் தாய் தினம் என்று அவர்களுக்காக ஒரு நாள் ஒதுக்குகிறார்கள்.

இப்போது காதலர் தினம் நம் முன்னால் வருகிறது நம் நாட்டு கலாசாரம் ,காத்லைப்
புனிதமாக மதிக்கிறது இலை மறைவு தலை மறைவு என்பார்கள் நான் பாரீஸில் போன போது அங்கு தினமும் காதலர் தினமாகத்தான் இருந்தது எவ்வளவு விரசமானக் காட்சிக்ள் !

rishi's reply

>>>>>>> காதல் விரசமானதல்ல அம்மா.... காமம்தான் அப்படி என நினைக்கிறேன்... உண்மையான காதலில் உரையாடல் இல்லை. ஸ்பரிசம் இல்லை... வெறும் அன்பும் அன்பான உணர்வுகளுமே....

நாம் காதல் என்பதையே தவறாகப் புரிந்துகொண்டுள்ளோம்...

ஆண் பெண் இடையே ஏற்படும் ஹார்மோன்களின் வேலையையே சிலர் அப்படி நினைத்து ஏமாந்து போகின்றார்கள்....

உண்மையில் அப்படியெல்லாம் இருப்பதில்லை. ஒரு ஓவியனுக்கு ஓவியத்தில் இருப்பது காதல்; சிற்பிக்கு சிற்பக்கலையில் இருப்பது காதல்; ஒருவனுக்கு பெளதிகம் பிடித்து அதில் ஆராய்ச்சி பண்ணுவதில் இருபப்து காதல்; அதிலேயே பசி பட்டினி எல்லாம் மறைந்து போதல், மறந்து போதல் காதல்;இவர்களுக்கு மனைவி/கணவன் இரண்டாம் பட்சமே...

அதிலேயே லயித்தல்.... அது ஒரு ஆழ்ந்த லயித்தல் நிலைக்கு ஏறக்குறைய ஆழ்ந்த தவ நிலைக்கு அழைத்துச்செல்லும்... இவர்கள் தனியே தவம் செய்யத் தேவையில்லை...!!! ஒவ்வொரு நொடியிலும் அவர்கள் தவத்தில்தான் இருக்கின்றனர்...அதனால்தான் அளப்பறிய முடியாத விஞ்ஞான உண்மைகள்/கண்டுபிடிப்புக்கள் நமக்குக் கிடைத்தன. விஞ்ஞானிகளும் ஏறக்குறைய மெய்ஞானிகளே...!!! விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல...

ஆனாலும் ஆண் பெண் கவர்ச்சி தவிர்க்க முடியாத ஒன்றுதான். இதிலும் ஒரு ஆழ்ந்த லயித்தல் கிடைக்கிறது. உண்மயான காதலும் தவம் போன்றதுதான்... அதன் சரியான அதிர்வலைகள் எத்தனை பேர் அறிந்திருப்பார்கள் எனத் தெரியவில்லை...

இன்றையக் காதலில் ஹார்மோகளின் வேலையே அதிகம். அதனால் எனக்கு இதிலெல்லாம் உடன்பாடில்லை....

உண்மையான காதலில் நான் உடன்படுகிறேன்...

vishalam raman wrote:

நான் தான் என் திசையைத் திருப்பிக் கொண்டேன் ஒரு பத்து வருடங்களாகத்தான்
இது மிகப் பிரபலமடைந்து வருகிறது இதன் காரணமாக உண்மைக் காதல் செழிக்கிறதோ என்னமோ ஆனால் வியாபாரம் செழிக்கிறது ,காதலர் தினத்தை நான் வரவேற்கிறேன்
ஆனால் அந்த அன்பை நல்ல ஆரோக்கிய நிலையில் உபயோகித்தால் அதைவிடச்
சிறந்தது வேறில்லை இந்தத் தினம் அன்பை வெளிப்படுத்த ஆனால் அதை ரசாபாசமாக
உபயோகிப்பதற்கு அல்ல ,இந்தக் காதலின் அர்த்தம் நம் நாட்டில் தவறாகப் புரிந்து கொண்டிருப்பார்களோ என்ற ஐயம் மனதிலே உண்டாகிறது

rishi's reply

>>>>>>>> என் எண்ண ஓட்டங்களும் அப்படியே...<<<<<<<<<<<




--~--~---------~--~----~------------~-------~--~----~
நம்பிக்கை கொள்!
தயக்கம் தகர் !!
வெற்றி நிச்சயம் !!!
-~----------~----~----~----~------~----~------~--~---





--
அன்புடன்
சக பயணி
ரிஷி ரவீந்திரன் www.rishiraveendran.tk

"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்..."
"நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது......."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."

லூசுக்கெல்லாம் வெண்ணெய் கொடுக்கமாட்டோம்

இது நிஜமாகவே என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்:

நான் அப்பொழுது எங்கள் கிராமத்திலிருந்து ஒரு 21 கிமீ தொலைவிலுள்ள கல்லூரிக்குத் தினமும் சைக்கிளில் (cycle expedite ட் டுங்க.... அடிக்கடி நண்பர்களுடன் சைக்கிள் யாத்ரா கிளம்பிடுவோம்...கன்யாகுமரிவரை செல்வோம்...) சென்று படித்திக்கொண்டிருந்தேன்.

அப்ப மார்கழி மாசம் ஆரம்பிச்சது. கிடணன் கோயில்ல மறு நா காலைய்ல நெய் பொங்க வெக்கனும் னு சொல்லி ஒரு 100 வெண்ணெய் வாங்கிட்டு வரச்சொன்னாங்க.

சாமிக்கு பண்றதால நல்ல தரமான வெண்ணெய்யா வாங்குடா அம்பின்னு ன்னு நேத்து பொறந்த பொடிசுல இருந்து இப்பவே டிக்கட் எடுக்க ரெடியா இருக்ற பெரியவங்க வரை ஒரே அட்வைசு...(இவங்களுக்கெல்லாம் பேசாம அட்வைஸ் திலகங்கள் னு ஒரு பட்டம் கொடுத்தா எம்புட்டு நல்லாருக்கும்...!)

அங்கன இங்கன னு விசாரிச்சப்ப காதில(KHADI) வாங்குனா நல்லதா கெடைக்கும் னு சொன்னாங்க. சரி னு அங்கன போயி , "ஒரு 100 கெராம் வெண்ணெ கொடுங்க அண்ணாச்சி..."ன்னு கேட்டேன்...

கடக்காரர் மேலயும் கீழயும் என்ன பாத்தார். சரியான பட்டிக்காட்டானா இருப்பானோ னு மனசுக்குள்ள நெனச்சிருப்பார் (அதான் நம்ம மொகத்ல்யே பிரம்மா எழுதி ஒட்டிவெச்சுட்டாருல்ல...!)

"கெடயாது தம்பி..." ன்னார்...

அங்கன , "இங்கே வெண்ணெய் கிடைக்கும்..." னு எழுதியிருந்த போட (board) காட்டி கேட்டேன்.

அவர், "லூசுக்கெல்லாம் நாங்க கொடுக்றதில்லப்பா..." ன்னு சொல்லிட்டார்.

நாம எப்பவும் போல "ஙே" னு முழிச்சிட்ருந்தேன்... வேறென்னத்தச் சொல்ல...

Tuesday, February 6, 2007

கிறுக்கல்கள்-அர்ஜுன் அம்மா அவங்களுக்கு

அன்புள்ள அர்ஜுன் அம்மா அவங்களுக்கு,

எனக்கும் இது மாதிரி ஒரு சம்பவம் நடந்துருக்கு... ஆனா கொஞ்சம் வித்தியாசம்...

நான் ஜப்பான் நாட்டு மேல என்னோட சின்ன வயசுலிருந்தே ஒரு தீராத காதல். அவங்களோட சுறுசுறுப்பு... பணிவு, மரியாதை, தவமும் புத்த மதக்கோட்பாடுகளும், அகிரா குரசாவாவின் படங்களும் ரொம்பவே கவர்ந்தன. அதனால அந்த மொழியக் கத்துக்கணும்னு போய் சேர்ந்தேன்...

அங்கின பெரியவங்கள்ளாம் வரலாம். எல்லா Software Company யில இருந்தும் அனுப்பியிருந்தாங்க... அந்த மேடம் எப்பப் பாத்தாலும் என்னயே கேள்வி கேட்டாங்க... ஏன்னா நா மூணாப்ல யே பாடத்தக் கவனிக்காம அணில் நுழைஞ்சத வேடிக்கப் பாத்தது அவங்களுக்கு தெரிஞ்சுடுச்சோ என்னவோ...?அங்கன நெறைய பெண் பிள்ளைகளும் இருந்தாங்க. காலேஜ் படிக்றவங்கள்ளாம் இருந்தாங்க...

இதென்னடா பாதரவே...? நம்மல நிம்மதியா யிருக்க விடமாட்டாய்ங்க போலிருக்கேனு நெனச்சேன்... ஆபீஸ்லதான் ஒரே போர் னா அட இங்கன கூடவா...? எப்டிட்ரா எஸ்கேப் ஆறது ன்னு யோசிச்ச்சேன்...

அவங்க எதோ சொல்றா மாதிரியே இருக்கும் ... எனக்கோ நம்ம பாக்யராஜ் படத்ல வர்ர மாரி, "ஏ கெள மீ... எ..கிஸ்ஸான்...ரகு தாத்தா..." (எனக்கு ஹிந்தி தெரியாதுங்க பெரியவங்களே...) இது மாரி தான் என்னோட படிப்பு இருந்துச்சு.

அப்றம் என்ன... நாயித்துக் கிழமை காலையில 8 மணிக்குத்தான் எப்பவும் கிளாஸ் ஆரம்பிக்கும்... அதனால நான் லேட்டா போனேன்... என்னோட ஃபிரண்டு போன் பண்ணி சொல்லிடுவான்... மாப்ள இன்னிக்கு டீச்சர் லீவுடா... வேற டீச்சர் வந்துரக்காகடா...கேள்வி எல்லாம் கிடையாதுடா... சும்மா தைரியமா வா..." என்றான்.

சரி ன்னு கிளாசுக்குப் போனா அதே டீச்சரே 70 MM ல சிரிக்கிறாங்க என்னப் பாத்து... எனக்கோ பக் பக் குனு ஆய்டிச்சு...

அன்னிக்கு எதோ தேதிகளை ஜப்பான் மொழியில எழுதிக் காட்டினாங்க. உடனே என்னப் பாத்து என்னோட டேட் ஆஃப் பர்த் என்னன்னு கேட்டாங்க...ஏன்னா அதுக்கும் காரணம் இருக்கு...

அப்ப (2003) நான் தாடி வெச்சி வெள்ளை ஜிப்பா போட்டு கழுத்ல ஒரு ருத்ராட்சம் போட்டு புருவ மத்தியில சின்னதா வட்ட வடிவுல ஒரு குங்குமப் பொட்டு வெச்சு காயகல்பம், தவம் னு பண்ணி கொஞ்சம் முகத்ல தேஜஸ் சேத்து ஒரு மார்க்கமாத்தான் இருந்தேனா... நான் எதோ ஹிமாலய சாமியார் னு நெனச்சுக் கேட்டாங்க...

அதுவும் காலேஜ் பொண்ணுங்கள்ளாம் என்னப் பாத்து சிரிக்றாங்க...இல்ல நானும் இந்த அண்ணா விட (என்னவிட பெரிய பெரியவங்கள்ளாம் வயசுலயும் சரி பதவியலும் சரி ஆண் பெண்ணுனு வந்திருந்தாங்க...Infosys, Satyam, இப்டி நிரைய கம்பெனி) சின்னப்பையந்தான் னு சொன்னா ஆரு நம்ப மாட்டாங்க.

நானும் ஜப்பான் மொழியில என்னோட டேட் ஆஃப் பெர்த் சொல்ல ஆரம்பிச்சேன். மொதல்ல தேதி கேட்டாங்க

15 னு சொன்னேன்...

அப்றம் மாசம் கேட்டாங்க...

ஆகஸ்டு ன்னு சொன்னேன்...

கிளாஸ்ல எல்லாருமே என்னயவே பாக்றாங்க.... கமெண்ட்ஸ், "ஆஹா சுதந்திரத் தினத்தன்னிக்குப் பொறந்த பய புள்ளடான்னு சொன்னாங்க...

அப்றம் வருஷம் கேட்டாங்க....அட்லீஸ்ட் நாகரீகமா அத யாரும் கேக்க மாட்டாங்க... ஆனா அந்த டீச்சருக்கோ என்ன எப்பவுமே ஒரு வழி பண்ணிட்டே இருப்பாங்க... நம்மள டீ.வி பெட்டி மாதிரி ஒரு எந்டெர்டெய்ன்மெண்ட்டா இல்ல நம்ம "ஙே..." ன்னு முழிக்றதப் பாத்தா காமெடி பண்ணனும் னு தோணுதோ இல்ல நம்ம கெரகமா ன்னு தெரியல....

இப்ப கிளாஸே பின் ட்ராப் சைலண்ட்... என்னோட பிறந்த வருஷம் தெரிஞ்சுக்கனும்னு அததன ஆர்வம் அல்லாருக்குமே...

நான் சொன்னேன்... 1947 னு...

எல்லோருமே கொல்னு சிரிச்சிட்டாங்க... டீச்சர் உட்பட...!. அன்னியலிருந்து நம்மள் அந்த ஜப்பான் கிளாஸ்ல எப்பவுமே ஏய்... சுதந்திரம்... ஏய் சுதந்திரம் னு சின்னப் புள்ளக எல்லாம் கேலி பண்ண ஆரம்பிச்சுடுச்சு...

இப்டித்தான் ரவீந்திரன் சுதந்திரன் ஆனான்... என்னத்தச் சொல்ல... நம்ம கெரகம் அப்டி.....!

அப்றம் ஒரு ஜப்பான் மொழியில கட்டுரைப் போட்டி இருந்துச்சு... அதுல நம்ம பிளாஸபி யை ஒரு 10 பக்கத்துக்கு எடுத்துவிட்டதுல அல்லாருக்கும் செம தலவலி ... யாருக்கும் எதுவுமே புரியலியாம்... அப்றம் கடைசியில அந்த போட்டி கேன்சல் னு நோட்டீசு போடுல் போட்டாங்க...

அட கெரகமே... அதுல ஜெயிச்சுருந்தா இன்ந்நேரம் ஜப்பான் டூர் போயி அங்கன இருக்ற புத்த பிட்சுக்கள ஒரு வழி பண்ணலாமுன்னுப் பாத்தா இப்டி ஆய்டிச்சே..னு நெனுச்சுக்கிட்டே நோட்டீசு போடயே "ஙே" னு பாத்துட்ருந்தேன்..

கிறுக்கல்கள்

அன்புள்ள நண்பர்களே....

நீங்கள் உங்களுள் ஒரு பய அலாரம் அடிப்பதை உணர்கிறீர்களா...? குறிக்கோளை அடைவதற்காக மிகவும் பிரயத்தனப்பட்டு அதன் பின்னால் ஓடுகிறீர்களா...? எப்பொழுதும் பதட்டமே உங்களை ஆட்கொள்கிறதா...? எப்பொழுதும் பரபரப்பாக உழைத்துவிட்டு அதன் முடிவு பூஜ்யமாக இருக்கிறதா...?

குறிக்கோளை நிர்ணயித்த நேரத்திற்குள்ளாகவே அடையாமல் நீண்ட சிரமம் பட வேண்டியிருக்கிறதா...? எல்லாமே Mesh up ( இதற்கும் தமிழில் மொழி பெருங்களேன் யாராவது...) ஆகி இக்கட்டான சூழலுக்குள் தள்ளப்படுகின்றீர்களா...? வாழ்க்கை உங்கள் கையை மீறிப்போய்க்கொண்டிருப்பதாய் உணர்கிறீர்களா...?

உங்கள் முதுகிற்குப் பின்னால் புறம் பேசப்படுவதை உணர்ந்திருக்கின்றீர்களா...? எப்பொழுதும் பற்றாக்குறையே ஏற்படுகின்றதா...? ஒன்றுக்கும் உதவாக்கரை என்ற எண்ணம் எப்பொழுதாவது வருகின்றதா...? தொட்டதெல்லாம் தோல்வியில் முடிகின்றதா...? உங்கள் அகமும் புறமும் ஒத்திசைவாய் இல்லை என்று உணர்கின்றீர்களா...? பிறர் உங்களை அவமானப் படுத்துவதாய் உணர்கிறீர்களா...?

அப்படியாயின் நான் இது குறித்து இங்கே என் சிந்தனைகளை உங்கள் அனுமதியுடன் பயணிக்க விடலாமா...?

அதற்கு முன் ஒரு சிறு நிகழ்வைக் குறிப்பிட்டுவிட்டுத் தொடரலாம்...

எங்க காலேஜ்ல அதுதான் கடேசி செமஸ்டர். மல்லிகார்ஜுனன் ற வேதியியல் புரபஸர் ரொம்ப வேக வேகமா பாடம் நடத்திட்ருந்தார். அவரோட பயம் அவருக்கு.... இந்த பய புள்ளக எப்ப ஸ்ட்ரைக் பண்ணுவாகளோ இல்ல இந்த SBK College (இது நம்ம விபாகை படிச்ச காலேஜ்... நாம் படிச்சது DA College) பயக ஸ்ட்ரைக் பண்ணிட்டு இந்தக் களவானிப்பசங்களயும் கூப்டுவாய்ங்களோ... இல்ல எப்ப தியேட்டர்ல புதுப்படம் போடுவாங்களோ அதுக்கு எதாவது ஒரு காரணம் சொல்லி ஸ்ட்ரைக் அடிப்பாகளோ, நாம் என்னக்கி சிலபஸ் முடிக்றது ன்னு ஒரு பயம்...நாயமான பயந்தானே...?

ரொம்ப வேகவேகமா பாடம் நடத்திட்ருந்தார்.... போர்டுல வேதிச்சமன்பாடு எழுதிட்ருந்தார்.

நாம எப்பவும் போல கடேசி

(மொத பெஞ்சுல சின்னப்பசங்களும் பெண்பிள்ளகளும் இருப்பாங்க...எங்கள மாரி படிப்பு வ்ராத பயகள்ளாம் வாத்தியார் கேள்வி கேக்கக்கூடாது ன்னே கடேசில ஒக்காருவோம்...ஆனா பாருங்களேன் அப்பவும் நம்மலதான் கரெட்டா கேள்வி கேட்டு இம்சை பண்ணுவாங்க...பொம்பளப்பிள்ளகளுக்கு முன்னாடியே வேணுமின்னே அவமானப் படுத்துவாங்க எல்லா வாத்தியாரும்...நம்ம கெரகம் அப்டின்னு நெனச்சுக்குவேன்...)

பெஞ்சுல "ஙே" ன்னு முழிச்சிக்கிட்டே தூங்கிட்ருந்தேன். தூரத்லருந்து பாத்தா ரொம்ப கவனமா பாடத்த கவனிக்ற மாரி இருக்கும். ஆனா நாம தூங்கிட்ருப்போம் ரொம்ப டெக்னிக்கா... அப்பப்ப எந்திரிச்சி, "சார் நீங்க நடத்னது புரியல... இன்னொருவாட்டி சொன்னா நல்லாருக்கும்..." னு ரொம்ப அக்கறையா கேட்டு வப்போம்... ஏன்னா....

1. அவர் நம்மள கேள்வி கேட்டுத் தொலச்சிருவாரு.(எப்பவுமே ரைட்டோ ராங்கோ நாம முந்திக்கிட்டோம் னா நம்ம மேல நாயம் இருக்ற மாரி லோகத்துக்கு தோணுமோ ல்லியோ...? )
2. நாமலும் கிளாஸ்ல தான் இருக்கோம் னு ஒரு அட்டண்டன்ஸ்
3. நாமலும் அக்கறையா கவனிக்றோம் னு ஒரு பில்டப்பு...

வாத்தியார் 4Al + 3 O2 ® 2 Al2O3 (Aluminium + Oxygen ® Aluminium Oxide)


அப்டின்னு போர்ட்ல எழுதிட்ருந்தார். நான் அப்பத்தான் தூக்கத்ல்ருந்து முழிச்சேன்... சரி நாமலும் எதாவது சொல்லிவைப்போம் னு ,சடார் னு எந்திரிச்சி, "சார்... சார்..." னு நின்னேன்...

வாத்தியார், "என்ன...?" ன்னு... கேட்டார்...

"நான் ஒண்ணு கண்டுபிடிச்சிட்டேன் சார்..." னு சொன்னேன்...

வாத்தியாருக்கோ ரொம்ப சந்தோசம்... ஆஹா நம்ம பய நாம் நடத்தி அதுல என்னத்தையோ புதுசா கண்டுபிடிஸ்ட்டானே..."னு சந்தோசம்...

ரொம்ப பெருமையா மத்த பசங்ககிட்ட சொன்னார்...

அவசரமா, "என்ன கண்டுபிடிச்சே...?ன்னு கேட்டார்.

"சார் அலுமினியம் ஆக்ஸைடுல ஆக்ஸிஜன் இருக்கும்போலத் தெரியுது சார்..." னு சொன்னேன்...

அம்புட்டுதான் எல்லாருமே கொல் னு சிரிச்சிட்டாங்க...

எதுக்டா சிரிக்றாங்கன்னே எனக்கு ஒன்னுமே புரியலே...நான் ""ஙே" னு பேந்தப் பேந்த விழிச்சிம் கூட புரியல்லே...

எண்ண அலைகளை, மன அலைகளை அதுக்குத் தகுந்தாற் போல் உயர்த்திக்கொண்டு வினாக்களை விடுக்கலாமே...? இல்லாவிட்டால் நான் அந்த கெமிஸ்ட்ரி புரபஸரை டைவர்ட் பண்ணியது போல இருக்கும்....அதான் நண்பர்களே...வேற ஒன்னும் இல்ல..