Sunday, September 30, 2007

யார் குரு...?

On 8/11/07, Sankar Kumar wrote:

//எவர் ஒருவர் கடவுளை உணர்ந்திருக்கிறாரோ, அவரே குருநாதராவார்//

இதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா?


அதை நாம் அறிவதெப்படி?

ரிஷியின் பதில்....

>>>>>>>>. தனக்கோ, பிறருக்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ எக்காலத்திலும் எண்ணம் சொல் செயலில் யாரொருவர் துன்பம் இல்லாமல் பார்த்துக்கொள்கின்றனரோ அவர் குருவிற்குரிய தகுதியினை அடைந்தவராவார். அசையாத நடுநிலை, அளவற்ற பொறுமை, நிஷ்காம்ய கர்மம் ஆகிய குணங்கள் அடிப்படையாய் அவரிடம் இருப்பவர் எவரோ அவர் குரு..


====================================================================================

Raveendran Krishnasamy hide details Sep 28 (2 days ago)
to nambikkai@googlegroups.com
date Sep 28, 2007 3:38 AM
subject Re: [NAMBIKKAI] Re: Today's Thought
mailed-by gmail.com


On 9/27/07, Tthamizth Tthenee wrote:

திரு ரவீந்த்ரன் கிருஷ்ணஸ்வாமி அவர்களே

அப்படியானால் கணிதம் ,அல்லது தமிழ், அல்லது ஆங்கிலம்
அல்லது வேறு ஏதாவது கற்றுக் கொடுக்கும் அறிஞ்ஞர்கள்
குருஸ்தானத்தை அடையமுடியாதா,அல்லது
குரு என்று அழைக்கப்படக் கூடாதவரா.....?


>>>>>...ரிஷியின் பதில்... >.>>>>>>>

எந்தப் பாடத்தினை போதிப்பவரானாலும் இதைக் கடைபிடிப்பவரே குருவாக இருக்க முடியும்.... அவ்விதம் இல்லாத பட்சத்தில் அது ஊதியத்திற்கான ஒரு வேலையாக மட்டுமே இருக்க முடியும்.... கடவுளை அறியத் தேவையில்லை. சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசமில்லா குணங்கள் இன்றியமையாதவை ஒரு குருவிற்கு...

உதாரணமாக எனக்கு எட்டாம் வகுப்பில் கணிதம் சொல்லிக் கொடுத்த பால்ராஜ் என்ற வாத்தியார். அவருக்கு கடவுள் நம்பிக்கை அறவே இல்லை. ஆனால் நேர்மைவாதி. தன் கடமையைச் செவ்வனே செய்தார். தன் வேலையை பிடித்தமானதாக்கிக் கொண்டதனால் என்னைப் போன்ற மக்கு மாணவர்களெல்லாம் கணிதத்தில் 100 மார்க்குகள் வாங்க முடிந்தது. 8 ஆம் வகுப்பு வரை கணிதம் என்றாலே எனக்கு அலர்ஜி. அதுவும் எங்க அம்மா ஒரு கணித ஆசிரியராக இருந்தும் எனக்கு கணிதம் அலர்ஜி....

இத்தனைக்கும் அவர் பாடம் நடத்தும் விதம் ஒன்றும் இதமாக இருக்காது. எப்பொழுது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவருடைய வகுப்பு மிகவும் உற்சாகமாக செல்லும். நேரம் போவதே தெரியாது. கணக்கைச் சொன்னதும் இங்கே நோட்டில் போட்டு விடை சொல்லும் வேகம் அவர் ஏற்படுத்திட்டார்.

"நீ உருப்பட மாட்டாய்.... ஃபெயிலாகிவிடுவாய்...." என்று ஒரு மக்கு மாணவனை சபிப்பார். அந்த மாணவன்தான் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதத்தில் 72 மார்க்குகள் வாங்கி கடைசி மாணவனாய் பாசானான் கணிதத்தில்...! நாங்கள் படித்ததோ அரசாங்க உயர்நிலைப் பள்ளி. அதுவும் ஒரு குக் கிராமத்தில்.... கணிதத்தில் மட்டுமே எங்களால் ஒழுங்காய் படிக்க முடிந்தது...

எங்காவது வரலாறு & புவியியலில் ஃபெயில் ஆன சரிதம் உண்டா...? எங்கள் பாடசாலையில் நடந்தது... நானும் வெறும் 39 மார்க்குகள் வாங்கி ஜஸ்ட் பாஸ்.... அவ்ளோ தான்.... ஒரே பாடசாலை... பெரும்பாலும் கணக்கில்தான் விழுவார்கள்... ஆனால் நாங்களோ வரலாறு & புவியியலில் சறுக்கினோம்.

இதில் கடவுள் நம்பிக்கையே இல்லாத அந்த கணக்கு வாத்தியார் தான் என்னைப் பொறுத்தவரை குரு....தன் கடமையை தெளிவாய் செய்தார்.... அநீதி கண்டு கொதிக்கும் அந்த குணம்.... சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசமில்லா அந்த நிலை.... தன் ஒவ்வொரு மாணவனும் கணக்கில் புலியாக வேண்டும் என்ற அந்த சுயநலமில்லா எண்ணம்.... மாணவர்களின் நலன் கருதி ஆசரியர்களுடன் எங்களுக்காக விவாதித்த அந்த மாமனிதரை இந்தக் கணத்திலும் நினைவு கூர்கின்றேன்...

வெறும் SSLC மட்டுமே முடித்துவிட்டு secondary Grade டீச்சராகவே தன் பணியினைத் தொடர்ந்தார், தன் முயற்சியால் B.Sc BT முடித்தார்... அப்படியே M.Sc தபாலில் முடித்தார்.... அக்கால கட்டத்தில் இவையெல்லாம் எட்ட முடியா உயரத்திலிருந்தன... 8 டூ 10 வரை... அவரிடம் பயின்ற கணிதமே System Simulation வரை கை கொடுக்க அடிப்படையாக அமைந்தது....

அவரிடம் ஆங்கிலமும் 9 B ல் பயின்றேன். ஆங்கில இலக்கணத்திற்கும் ஆங்கில பாடத்திற்கும் அவரே இன்சார்ஜ். ஏனெனில் யார் கிளாஸ் வாத்தியாரோ அவரே ஆங்கிலம் எடுக்கவேண்டும் என்ற எழுதப்படாத ஒரு சட்டம் அந்த ஸ்கூலில், அதுவும் Excellent ஆய் அமைந்தது.... குறிப்பாக ஆங்கிலக் கட்டுரையை மனப்பாடம் செய்தே எழுதுவது வழக்கம்... ஆனால் அவர் ஒருவரே சொந்தமாக ஆங்கிலத்தில் எழுத எங்களை ஊக்குவித்தார். அதிலும் அனைவரும் நல்லவிதமாய் வெளியேறினோம். பிரச்சினை வரலாறு & புவியியல், அறிவியல்...

குரு என்பவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவராயும் இருக்கலாம். ஆனால் நேர்மையானவராகத் தான் சொல்வதிலும் செய்வதிலும் தெளிவுள்ளவராக இருக்கவேண்டும்....

இவர் எங்களுக்கும் தனக்கும் தீங்கு செய்யவில்லை, நன்மை செய்தார், ஆக நான் முதலில் சொன்ன விதி இங்கே பொருந்துகின்றது...

>>>>>>>>>>>>>>>>

கடவுளை அறிந்தவர் மட்டும் தான் குரு என்றால்
இவர்களெல்லாம் குரு இல்லையா?

தனக்கோ, பிறருக்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ எக்காலத்திலும் எண்ணம் சொல் செயலில் யாரொருவர் துன்பம் இல்லாமல் பார்த்துக்கொள்கின்றனரோ அவர் குருவிற்குரிய தகுதியினை அடைந்தவராவார். அசையாத நடுநிலை, அளவற்ற பொறுமை, நிஷ்காம்ய கர்மம் ஆகிய குணங்கள் அடிப்படையாய் அவரிடம் இருப்பவர் எவரோ அவர் குரு....

//எவர் ஒருவர் கடவுளை உணர்ந்திருக்கிறாரோ, அவரே குருநாதராவார்//

இதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா?

நீங்கள் சொல்லிய இந்த தகுதிகளில் எதுவுமே
இல்லாத பலர் பாடங்கள் போதிப்பதில்லையா?
பள்ளிகளில் குருவாக இருப்பதில்லையா?


>>>>>>>>>>>

அதன்பின் அவர்கள் நம் வாழ்வில் வருவதில்லை... ஆனால் எனக்கு அந்த பழைய கணக்கு வாத்தியார் (10 ஆம் வகுப்பிற்குப் பின் அவரை பார்க்கவில்லை...) இந்த நொடி வரை என் வாழ்வோடு இணைந்திருக்கின்றாரே...? எப்படி...? எல்லோரும் போதித்தார்கள்... ஆனால் எங்கள் மாணவர்களின் மனதினில் உயரமாய் இன்றும் இவர் இருக்கின்றாரே....?

இவர் ஒரு குரு....

மற்ற பாடங்களைப் போதித்தவர்கள் 10 வருட வினாத்தாட்களை மனப்பாடம் பண்ணி எழுதி பாஸ் பண்ண வைக்க உதவியதால் அவர்கள் சம்பளம் பெற்ற கூலிகள்....அவ்வளவே...!

கூலி வேறு; குரு வேறு, குழப்பம் வேண்டாம்.

நான் சொன்ன இந்த கணக்கு வாத்தியாரின் உதாரணத்தில் நான் சொன்ன எல்லா குணங்களும் அடங்கிவிட்டன. என் அனுபவத்திலிருந்தே குருவின் வரையறையை எழுத முடிந்தது்....

====================================================================================

Tthamizth Tthenee hide details Sep 28 (2 days ago)
reply-to nambikkai@googlegroups.com
to nambikkai@googlegroups.com
date Sep 28, 2007 3:48 AM
subject [NAMBIKKAI] Re: Today's Thought
mailed-by googlegroups.com
மிக அருமை நண்பரே நான் உங்களைப் புண்படுத்த
அந்தக் கேள்வியைக் கேட்க்கவில்லை
என்னுடைய வாதமே
நமக்கு கற்றுக் கொடுப்பவர்கள் யாராயினும்
அவர் நம்மைவிட அறிவில்,வயதில், அனுபவத்தில்
குறைந்தவராக இருப்பினும்
நமக்கு கற்றுக் கொடுக்கும்போது அவர் குருவாகிறார்

பொதுவாக ரிஷி மூலம் ,நதி மூலம்
பார்க்கக் கூடாது என்று பெரியோர் சொல்வர்

குருவுக்கு என்ன தகுதி என்று நாம் பார்க்க வேண்டாம்
நமக்கு அவருடைய மாணாக்கனாக
இருக்கும் தகுதியை வளர்த்துக் கொள்வோம்

கற்றுக் கொள்ள அசைப்படுபவனுக்கு
உலகில் அனைவருமே குருதான்

அப்பனுக்கே பாடம் சொன்ன முருகன்
சிவனுக்கே குருவானான்


அன்புடன்
தமிழ்த்தேனீ

Monday, September 3, 2007

உன்னால் முடியும் தம்பி...

உன்னால் முடியும் தம்பி...

On 6/30/07, Siva Sankar wrote:

> இந்த இழையை நான் இன்றுதான் பார்க்கின்றேன்
> என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள், நான் எழுத நினைத்திருந்தேன், இதே தலைப்பில்,
> ஆனால் எனக்கும் முன்பே முரளி எழுதி இருக்கின்றார், ஆனால் நான் இழந்தவை பட்டியல்
> வேறு , அவை என் முனைவர் பட்டப்படிப்பிற்காக, பட்டத்திற்காக நான் இழந்தவை,
> அவற்றில் ஒரு சில , பார்ப்பவர்களுக்கு மிகவும் சாதாரணமாக தோன்றலாம், ஆனால்
> எனக்கு அவை மிகப்பெரியவையே...முதலாவதாக

> 1) நாளை 01-07-2007 அன்று கோவையில் நடக்க இருக்கும், முத்தமிழ் சந்திப்பு.
> மஞ்சூர் அண்ணன் மற்றும் அனைத்து நண்பர்களையும் சந்திக்கும் சந்தோசத்தில் இருந்த
> என் சந்தோசத்தில் விழுந்த இடி, நேற்று என் மேற்பார்வையாளர் (வழிகாட்டி என்று
> சொல்லப்பிடிக்க வில்லை, ஏனெனில் அவருக்கு நான் தான்
> வழிகாட்டிக்கொண்டிருக்கின்றேன் :( ) அனுப்பிய மின்னஞ்சல், இன்னும் ஒரு
> வாரத்திற்கு வேலையை கொடுத்து , இன்று புறப்படலாம் என்று பயணச்சீட்டு பதிவதற்கு
> அவரிடம் அனுமதி கேட்டு போட்ட மின்னஞ்சலுக்கான பதிலில் வெடிகுண்டாக வந்தது, ஒரு
> வாரம் கழித்து போ என்று, தற்போதைய சுட சுட வந்த இழப்பு இது.

> 2) என் அம்மாவைப்பெற்ற பாட்டி (ஆயம்மா)யின் மரணம். தகவல் வந்தது ராத்திரி 11
> மணி, இங்கிருந்து மறுநாள் காலை 11 மணிக்கு விமானம் பிடித்தால் கூட, அதற்கு
> அடுத்த நாள் காலைதான் போய் சேரமுடியும் ஊருக்கு :( , என் அன்னையை விட அதிகமாக
> என்னை நேசித்தவர், அவரின் ஒரே மகன் இறந்த சமயத்தில் பிறந்ததால் என்னை தன்
> மகனாகவே நினைத்து வளர்த்தவர், அவர் இறந்தால் அவருக்கு கொள்ளி நான் தான்
> போடவேண்டும் என்று என்னிடம் சத்தியம் வாங்கி இருந்தார், செய்ய முடியவில்லை,
> 10ஆம் நாள் காரியத்திற்கே செல்ல முடிந்தது . :(

> 3) என் அப்பாவைப்பெற்ற பாட்டி, அவரின் மரணத்திற்கும் செல்லமுடியவில்லை, 95
> வயது வரை எங்கள் வீட்டிலேயே , கன்றுக்குட்டி போல் சுற்றி சுற்றி வந்தவர், காசு
> வேண்டுமென்றால் ஓடிப்போய் அவரிடம் நிற்பேன், ஒரு 10 ரூபாய் எடுத்து, என்
> அம்மாவிற்கு தெரியாமல் கொடுப்பார், ஓடிப்போய் ஏதேனும் வாங்கி சாப்பிட எடுத்து
> வந்து அவருக்கும் அம்மாவிற்குமே கொடுத்துவிட்டு நானும் சாப்பிடுவேன், அவரின்
> மரணத்திற்கு செல்லமுடியவில்லை.

> 4) பெரியம்மா, புற்று நோயால் இறந்தார், அவரின் மரணத்திற்கும்
> செல்லமுடியவில்லை

> 5) சித்தப்பா மகன் , திடீரென்று வந்த மஞ்சள் காமாலையில் இறந்தான், அந்த
> மரணத்திற்கும் போகமுடியவில்லை, அதற்கு 6 மாசம் முன்னால்தான் கல்யாணம்
> செய்தானாம், அதுவும் எனக்கு தெரியப்படுத்தவில்லை ( 2 வருசம் வீட்டுப்பக்கமே
> போகாததால் வந்த இழப்புகள் இவை :(( )

> 6) பெரியப்பா பையன் ( தம்பி) கல்யாணம், தொடர்ந்து அவன் குழந்தை பிறப்பு, (
> இன்றுவரை அந்த குழந்தை முகத்தை கூட பார்க்கவில்லை )

> 7) அத்தை மகன் திருமணம், கூட மாட இருந்து செய்திருக்கவேண்டியவன் நான்,
> சின்னவயதிலிருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள், என்னைவிட ஒரு வயதே பெரியவன், சொந்த
> சகோதரன் போல் பழகியவன், ( திருமணத்திற்கு நான் வரவில்லை என்று இன்றுவரை அவனிடம்
> பேச்சுவார்த்தை இல்லை :(( )

> 8) கலிடோனியன் காலேஜ் ஆப் எஞ்சினியரிங், ஓமன், மஸ்கட் ல் உதவிப்பேராசிரியர்
> பணி, ஒன்றேகால் லட்சம் மாத சம்பளத்தோடு கிடைத்தும் சேரமுடியாத சூழல்.

> 9) இப்போ கையில் கிடைத்த விப்ரோ வேலை பறிபோகும் சூழல்.

> 10) அண்ணனாக வீட்டில் இருந்து தங்கைக்கு வரன் தேடுவதில் அப்பாவிற்கு உதவி
> செய்யமுடியாத சூழல்....:(

> 11) எல்லாவற்றிற்கும் மேல், எல்லோரின் வாழ்விலும் வரும்.......அந்த
> காதல்.....
> 12 வருடங்கள் ஒருத்திக்காக காத்திருந்து, இங்கு வந்துவிட்ட ஒரே காரணத்தால்,
> இருவருக்கும் மனசுக்கு பிடித்திருந்தும், அங்கிருந்தால் அவசியம்
> முடிந்திருக்கவேண்டிய கல்யாணம், இன்று வேறொருவருடன் அவர், கையில் ஒரு
> குழந்தையுடன், போனமுறை வீட்டிற்கு சென்றபோது, ஒரு அழகிய பரிசுப்பொருள்
> வாங்கிச்சென்று கொடுத்து விட்டு வாழ்த்திவிட்டு வந்தேன், ( என்ன சொல்லி
> வாழ்த்த???? கல்யாண புகைப்பட தொகுப்பை என் கையில் கொடுத்து, அதற்கு முன்
> குழந்தையை கையில் கொடுத்துவிட்டு கண் கலங்க என்னைப்பார்த்த அவள் பார்வை , என்
> வாழ்வின் இறுதி வரை என்னை சுட்டுக்கொண்டே இருக்கும்).

> ஒரு முறை தான் , ஒரு முறை தான், ஒரு சில தவறுகள் ஒரு முறைதான்....

> தவமாய் தவமிருந்து ...படப்பாடல் ஷியாம் ரேடியோவில் சமயோசிதமாக
> ஓடிக்கொண்டிருக்கின்றது.....என்னவென்று சொல்ல??????? இவ்வளவு விசயங்களை இழந்து
> பெறும், இந்த பட்டம் , எனக்கு தேவைதானா? இந்த பட்டம்? அவ்வளவு தகுதி வாய்ந்ததா?
> நாளை நான் ஒரு முனைவன், இடுப்பெலும்பு ஆராய்ச்சியில் இந்தியாவிலேயே, இந்த
> வருடம் ஆராய்ச்சி முடிக்கும் ஒரே ஆராய்ச்சியாளன் நான் மட்டுமே....என்ன
> லாபம்???? விண்ணப்பிக்கும் அனைத்து வேலைகளும் அழைப்பு வருகின்றது...ஆனாலும்
> நான் இழந்தவை????????? யாரேனும் தங்கள் கருத்தினை இதற்கு கூறினால்
> மகிழ்வேன்....:((

> சிவா...செங்கம்.....

> --
> M.Sivasankar, Research Scholar, Dept of Mech Engg, IITG, Assam , India.
> web: http://biosankar.4t.com
> blog for tamil articles: http://srishiv.blogspot.com

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



இந்த இழைக்கு, ரிஷியின் பதில்....

அன்புள்ள சிவ சங்கர்,

உங்கள் மடல் படித்தேன்.

அதிலிருந்து ஒன்றே ஒன்று மட்டும் புரிகின்றது. நீங்கள் வாழ்க்கையில் பெரிதாக
எதுவும் அடி வாங்கவில்லை என்று.

ஒரு மத்திமக் குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளெல்லாம் ஒரு பெரிய சோதனையா
என்ன...?

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் எத்தனை அவமானங்கள்...? எத்தனை அடி...? எத்தனை
ஏளனப் பேச்சு...? இப்பொழுது ஒரு 10 வருடங்கள் பின்னோக்கிப் பார்த்தால் அது
அத்தனையும் ஒரு நகைச்சுவையாகவே இருக்கும்.

உங்களது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் அனைவரின் வாழ்விலும் நிகழும்
ஒரு சாதாரண நிகழ்வே...

ஆர்ம்ஸ்ட்ராங் நிலாவிற்குப் பயணித்தாரே... அப்பொழுது அந்த நிலவில்
அவர்கள் பட்ட சிரமத்தினைவிடவா....? மனித நடமாட்டமே ஏன் ஆக்ஸிஜனே
இல்லாத சூழல்..ஈர்ப்பு விசை இல்லாத சூழல்...உலகைவிட்டு எங்கோ இன்னொரு கோளில்
அந்த இருள்... இதையெல்லாம் நினனத்துப் பாருங்கள்...உங்களின் துன்பம் பெரிதான
ஒன்றா...?

ஆரோக்கியமாக இருக்கும்பொழுது உடல் நலனின்
அருமை தெரிவதில்லை. குணப்படுத்த முடியாத நோய் வரும்பொழுதுதான் நாம் நம்
உடல் நலனை எண்ணிப்பார்க்கின்றோம்.
இதற்கு சர்க்கரை நோய் வந்தாலே நான் நிம்மதியாய் இருந்திருப்பேன் என ஒரு ஒப்பீடு
செய்வோம் அப்பொழுது.

துன்பத்தினைத் துன்பப்படுத்துங்கள். துன்பத்திற்கு ஒரு சவால் விடுங்கள்.

நாம் நம் குறிக்கோளில் ஜெயிக்கலாம் அல்லது தோற்கலாம். இரண்டில் எது
நிகழ்ந்தாலும் தவறில்லை. நன்மைக்கே. ஆனால் எதுவும் நிகழாமல் இருப்பதே தவறு.

எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் மனம் சலனமின்றி நம் குறிக்கோளை நோக்கிப்
பயணித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

Continously Move towards your goal with detached attachment like a wheel.

எனக்கு என் நுரையீரல் பிடிக்கவில்லை; என் கணையம் எனக்குப் பிடிக்கவில்லை
என்றெல்லாம் நாம் வருத்தப்பட முடியுமா...? அடுத்து என்ன என்று எண்ணி அடுத்த
நிகழ்வினை நோக்கிப் பயணிப்போம்.

எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும் எந்த உணர்வுகளுக்கும் அடிமையாகிட வேண்டாம்.
அதற்காக மனம் இரும்பாக இருக்க வேண்டும் என்ற அர்த்தமல்ல.

இக்கட்டான சூழ்நிலையில் புத்திசாலித்தனமாகச் செயல்படவேண்டும்.இங்கே மிஸ்டர்
எக்ஸ் , மிஸ்டர் வொய் எப்படி கீழிருக்கும் சம்பவத்தினை எதிர்கொள்கின்றனர் எனப்
பார்க்கலாம்.

உதாரணமாக நாம் எதிர்பாராவிதமாக ஒரு விபத்தினைச் சந்திக்கின்றோம். நல்ல பலத்த
அடி. உடன் வந்தவர் உங்கள் உயிர் காதலி.

இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்...?

*மிஸ்டர் எக்ஸ் சின் நிலைப்பாடு:*

ஐயோ என் காதலிக்கு இப்படி ஆகிவிட்டதே...? ஐயகோ இனி நான் என் செய்வேன்...?
எனக்கு மட்டும் ஏன் இப்படி வருகின்றது...? என ஒரு ஆர்ட் ஃபிலிம் ரேஞ்சுக்கு
கண்ணீர் சிந்துகின்றான். மேலும் சூழலையும் நிகழ்வுகளையும் மோசமடையச்
செய்கின்றான்.

மாறாக *மிஸ்டர் வொய்:*,

ஆல்ரைட்.. இப்பொழுது ஆக்ஸிடெண்ட் ஆகிவிட்டது. அடுத்து என்ன செய்வது...?

தன்னால் முடிந்த முதலுதவி. உடனே ஒரு ஆம்புலன்சுக்கு எமர்ஜென்சி கால்.

சுற்றுப்புறத்தை உதவிக்கு அழைக்கின்றான்.

சூழல் மாறுகின்றது.

காதலி தக்க நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் விரைவில்
காப்பாற்றப்படுகின்றார்.

அன்பான அரவணைப்பில் விரைவில் குணமடைகின்றார்.

மிஸ்டர் வொய்யே தன் காதலியின் மீது உண்மையான காதல் வைத்திருப்பதாய் உள்ளது...
செயல் செயல்....

ஆனால் நாம் அழவில்லையென்றால் அவள் நம்மைத் தப்பாக நினைப்பாளே என்றுதான் நம்மில்
அநேகர் உணர்ச்சிகளுக்கு முதலிடம் தருகின்றோம்.

சில நிகழ்வுகள் நம் கையிலில்லை.

அதை நாம் பக்குவத்டன் ஏற்றுக்கொள்ளும் மனோநிலை வரப்பெற்றவராய் இருக்கவேண்டும்.

நான் குள்ளம். புல்லப்ஸ் சிரசானம் மருத்துவம் என எல்லாம் முயன்றும் பலன்
பூஜ்ஜியம். என்னை மட்டும் ஏன் இறைவன் அமிதாப் மாதிரி உயரமாகப் படைக்கவில்லை
எனப் புலம்புவது எப்படி நியாயம்...?

இது பாரம்பரியம். ஓகே இதுதான் என்னியல்பு என்று ஏற்றுக்கொள்ளும் அந்த மனோபாவம்
இருக்கின்றதே... அப்பொழுது மனம் இலேசாகின்றது....

அதற்கு பரிகாரம் என்ன...? அடுத்த ஜெனரேஷனை உயரமாக வளர்க்க ஜப்பானில் ஒரு
ஆராய்ச்சி. புரதத்தினை ஒரு சரியான விகிதத்திலே பயன்படுத்தி உயரத்தினை மாற்ற
முயற்சிக்கின்றனர். இன்னும் ஒரு ஐந்தாறு தலைமுறையில் ஜப்பானியர்களின் உயரம்
உயரும்.

இப்படியெல்லாம் சொல்வதற்காக, "நீங்கள் என்னிடத்தில் இருந்து பார்த்தால்
புரியும்...உங்களுக்கு இது மாதிரியான கஷ்டம் வந்ததில்லை.. அதனால்தான் நீங்கள்
அட்வைஸ் செய்கின்றீர்கள்...." எனக் கேட்கலாம்.

நானும் இந்தப் பிரச்சினைகளையெல்லாம் கடந்துதான் வந்தேன். ஒரே ஒரு வித்தியாசம்
என் வாழ்வில் துரதிர்ஷ்டவசமாய் காதல் மட்டும் வரவில்லை...

மற்றபடி இதேபோல் ப்ரபசர் டார்ச்சர்... இழுத்தடித்தல்... மார்க் குறைத்தல் என்ற
எல்லா அனுபவமும் எனக்கும் ஏற்பட்டிருக்கின்றது.

பல்கலையில் ஒரு பாடவேளையில் ஆழ்ந்து லயித்துக்கொண்டிருந்த பொழுது என்னை வளர்த்த
என் பெரியம்மா அவர்களின் மரணச்செய்தி... இதே போல் கொள்ளி போட முடியா சூழல்...
அவருக்கு நான் மட்டுமே ஒரே வளர்ப்பு மகன்... அவருடைய இறுதி ஆசையே நான் கொள்ளி
வைக்கவேண்டுமென்ற சிவாவின் பாட்டி போன்ற அதே ஆசை...

வருத்தம் இருந்தது . ஆனாலும் நான் அழவில்லையே...! ஆல் ரைட் அவரது பயணம்
முடிவடைந்தது. அப்பொழுதுதான் என்னுள் ஏற்கெனவே இருந்த அந்த சகபயணி என்ற
தத்துவம் இன்னும் ஆழமாய் வேரூன்றியது.

நாமனைவரும் யார்...? ஒரே இரயிலில் ஒரே கூபேயில் பயணிக்கும் சகபயனிகள்
அவ்வளவே...

என் நிறுத்தம் வந்தால் நான் இறங்கிவிடுவேன், உங்கள் நிறுத்தம் வந்தால் நீங்கள்
இறங்கி விடுவீர்கள். அது அம்மாவாயினும் சரி மனைவியாயினும்
சரி...குழந்தையாயினும் சரி...நாமனைவரும் சக பயணிகள்தான். பயணம் முடியும்வரை
அனைவருடன் இணக்கமாய் நட்புடன் பிறருக்கு உதவிக்கொண்டு மகிழ்ச்சியாய் நம்
பயணத்தினைத் தொடர்வோம்...