Saturday, June 30, 2007

பயணம்

sivas......iitg@gmail.com> hide details 10:14 am (8 hours ago)
reply-to muththamiz@googlegroups.com
to muththamiz@googlegroups.com
date Jun 30, 2007 10:14 AM
subject [muththamiz] Re: நான் ரொம்பவே இழந்தேன்
mailed-by googlegroups.com

இந்த இழையை நான் இன்றுதான் பார்க்கின்றேன்
என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள், நான் எழுத நினைத்திருந்தேன், இதே தலைப்பில், ஆனால் எனக்கும் முன்பே முரளி எழுதி இருக்கின்றார், ஆனால் நான் இழந்தவை பட்டியல் வேறு , அவை என் முனைவர் பட்டப்படிப்பிற்காக, பட்டத்திற்காக நான் இழந்தவை, அவற்றில் ஒரு சில , பார்ப்பவர்களுக்கு மிகவும் சாதாரணமாக தோன்றலாம், ஆனால் எனக்கு அவை மிகப்பெரியவையே...முதலாவதாக

1) நாளை 01-07-2007 அன்று கோவையில் நடக்க இருக்கும், முத்தமிழ் சந்திப்பு. மஞ்சூர் அண்ணன் மற்றும் அனைத்து நண்பர்களையும் சந்திக்கும் சந்தோசத்தில் இருந்த என் சந்தோசத்தில் விழுந்த இடி, நேற்று என் மேற்பார்வையாளர் (வழிகாட்டி என்று சொல்லப்பிடிக்க வில்லை, ஏனெனில் அவருக்கு நான் தான் வழிகாட்டிக்கொண்டிருக்கின்றேன் :( ) அனுப்பிய மின்னஞ்சல், இன்னும் ஒரு வாரத்திற்கு வேலையை கொடுத்து , இன்று புறப்படலாம் என்று பயணச்சீட்டு பதிவதற்கு அவரிடம் அனுமதி கேட்டு போட்ட மின்னஞ்சலுக்கான பதிலில் வெடிகுண்டாக வந்தது, ஒரு வாரம் கழித்து போ என்று, தற்போதைய சுட சுட வந்த இழப்பு இது.

2) என் அம்மாவைப்பெற்ற பாட்டி (ஆயம்மா)யின் மரணம். தகவல் வந்தது ராத்திரி 11 மணி, இங்கிருந்து மறுநாள் காலை 11 மணிக்கு விமானம் பிடித்தால் கூட, அதற்கு அடுத்த நாள் காலைதான் போய் சேரமுடியும் ஊருக்கு :( , என் அன்னையை விட அதிகமாக என்னை நேசித்தவர், அவரின் ஒரே மகன் இறந்த சமயத்தில் பிறந்ததால் என்னை தன் மகனாகவே நினைத்து வளர்த்தவர், அவர் இறந்தால் அவருக்கு கொள்ளி நான் தான் போடவேண்டும் என்று என்னிடம் சத்தியம் வாங்கி இருந்தார், செய்ய முடியவில்லை, 10ஆம் நாள் காரியத்திற்கே செல்ல முடிந்தது . :(

3) என் அப்பாவைப்பெற்ற பாட்டி, அவரின் மரணத்திற்கும் செல்லமுடியவில்லை, 95 வயது வரை எங்கள் வீட்டிலேயே , கன்றுக்குட்டி போல் சுற்றி சுற்றி வந்தவர், காசு வேண்டுமென்றால் ஓடிப்போய் அவரிடம் நிற்பேன், ஒரு 10 ரூபாய் எடுத்து, என் அம்மாவிற்கு தெரியாமல் கொடுப்பார், ஓடிப்போய் ஏதேனும் வாங்கி சாப்பிட எடுத்து வந்து அவருக்கும் அம்மாவிற்குமே கொடுத்துவிட்டு நானும் சாப்பிடுவேன், அவரின் மரணத்திற்கு செல்லமுடியவில்லை.

4) பெரியம்மா, புற்று நோயால் இறந்தார், அவரின் மரணத்திற்கும் செல்லமுடியவில்லை

5) சித்தப்பா மகன் , திடீரென்று வந்த மஞ்சள் காமாலையில் இறந்தான், அந்த மரணத்திற்கும் போகமுடியவில்லை, அதற்கு 6 மாசம் முன்னால்தான் கல்யாணம் செய்தானாம், அதுவும் எனக்கு தெரியப்படுத்தவில்லை ( 2 வருசம் வீட்டுப்பக்கமே போகாததால் வந்த இழப்புகள் இவை :(( )

6) பெரியப்பா பையன் ( தம்பி) கல்யாணம், தொடர்ந்து அவன் குழந்தை பிறப்பு, ( இன்றுவரை அந்த குழந்தை முகத்தை கூட பார்க்கவில்லை )

7) அத்தை மகன் திருமணம், கூட மாட இருந்து செய்திருக்கவேண்டியவன் நான், சின்னவயதிலிருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள், என்னைவிட ஒரு வயதே பெரியவன், சொந்த சகோதரன் போல் பழகியவன், ( திருமணத்திற்கு நான் வரவில்லை என்று இன்றுவரை அவனிடம் பேச்சுவார்த்தை இல்லை :(( )

8) கலிடோனியன் காலேஜ் ஆப் எஞ்சினியரிங், ஓமன், மஸ்கட் ல் உதவிப்பேராசிரியர் பணி, ஒன்றேகால் லட்சம் மாத சம்பளத்தோடு கிடைத்தும் சேரமுடியாத சூழல்.

9) இப்போ கையில் கிடைத்த விப்ரோ வேலை பறிபோகும் சூழல்.

10) அண்ணனாக வீட்டில் இருந்து தங்கைக்கு வரன் தேடுவதில் அப்பாவிற்கு உதவி செய்யமுடியாத சூழல்....:(

11) எல்லாவற்றிற்கும் மேல், எல்லோரின் வாழ்விலும் வரும்.......அந்த காதல்.....
12 வருடங்கள் ஒருத்திக்காக காத்திருந்து, இங்கு வந்துவிட்ட ஒரே காரணத்தால், இருவருக்கும் மனசுக்கு பிடித்திருந்தும், அங்கிருந்தால் அவசியம் முடிந்திருக்கவேண்டிய கல்யாணம், இன்று வேறொருவருடன் அவர், கையில் ஒரு குழந்தையுடன், போனமுறை வீட்டிற்கு சென்றபோது, ஒரு அழகிய பரிசுப்பொருள் வாங்கிச்சென்று கொடுத்து விட்டு வாழ்த்திவிட்டு வந்தேன், ( என்ன சொல்லி வாழ்த்த???? கல்யாண புகைப்பட தொகுப்பை என் கையில் கொடுத்து, அதற்கு முன் குழந்தையை கையில் கொடுத்துவிட்டு கண் கலங்க என்னைப்பார்த்த அவள் பார்வை , என் வாழ்வின் இறுதி வரை என்னை சுட்டுக்கொண்டே இருக்கும்).

ஒரு முறை தான் , ஒரு முறை தான், ஒரு சில தவறுகள் ஒரு முறைதான்....

தவமாய் தவமிருந்து ...படப்பாடல் ஷியாம் ரேடியோவில் சமயோசிதமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.....என்னவென்று சொல்ல??????? இவ்வளவு விசயங்களை இழந்து பெறும், இந்த பட்டம் , எனக்கு தேவைதானா? இந்த பட்டம்? அவ்வளவு தகுதி வாய்ந்ததா? நாளை நான் ஒரு முனைவன், இடுப்பெலும்பு ஆராய்ச்சியில் இந்தியாவிலேயே, இந்த வருடம் ஆராய்ச்சி முடிக்கும் ஒரே ஆராய்ச்சியாளன் நான் மட்டுமே....என்ன லாபம்???? விண்ணப்பிக்கும் அனைத்து வேலைகளும் அழைப்பு வருகின்றது...ஆனாலும் நான் இழந்தவை????????? யாரேனும் தங்கள் கருத்தினை இதற்கு கூறினால் மகிழ்வேன்....:((

சிவா...செங்கம்.....

M.Sivasankar, Research Scholar, Dept of Mech Engg, IITG, Assam , India.
web: http://biosankar.4t.com
blog for tamil articles: http://srishiv.blogspot.com



===
அன்புள்ள சிவ சங்கர்,

உங்கள் மடல் படித்தேன்.

அதிலிருந்து ஒன்றே ஒன்று மட்டும் புரிகின்றது. நீங்கள் வாழ்க்கையில் பெரிதாக எதுவும் அடி வாங்கவில்லை என்று.

ஒரு மத்திமக் குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளெல்லாம் ஒரு பெரிய சோதனையா என்ன...?

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் எத்தனை அவமானங்கள்...? எத்தனை அடி...? எத்தனை ஏளனப் பேச்சு...? இப்பொழுது ஒரு 10 வருடங்கள் பின்னோக்கிப் பார்த்தால் அது அத்தனையும் ஒரு நகைச்சுவையாகவே இருக்கும்.

உங்களது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் அனைவரின் வாழ்விலும் நிகழும் ஒரு சாதாரண நிகழ்வே...

ஆர்ம்ஸ்ட்ராங் நிலாவிற்குப் பயணித்தாரே... அப்பொழுது அந்த நிலவில் அவர்கள் பட்ட சிரமத்தினைவிடவா....? மனித நடமாட்டமே ஏன் ஆக்ஸிஜனே இல்லாத சூழல்..ஈர்ப்பு விசை இல்லாத சூழல்...உலகைவிட்டு எங்கோ இன்னொரு கோளில் அந்த இருள்... இதையெல்லாம் நினனத்துப் பாருங்கள்...உங்களின் துன்பம் பெரிதான ஒன்றா...?

ஆரோக்கியமாக இருக்கும்பொழுது உடல் நலனின் அருமை தெரிவதில்லை. குணப்படுத்த முடியாத நோய் வரும்பொழுதுதான் நாம் நம் உடல் நலனை எண்ணிப்பார்க்கின்றோம். இதற்கு சர்க்கரை நோய் வந்தாலே நான் நிம்மதியாய் இருந்திருப்பேன் என ஒரு ஒப்பீடு செய்வோம் அப்பொழுது.

துன்பத்தினைத் துன்பப்படுத்துங்கள். துன்பத்திற்கு ஒரு சவால் விடுங்கள்.

நாம் நம் குறிக்கோளில் ஜெயிக்கலாம் அல்லது தோற்கலாம். இரண்டில் எது நிகழ்ந்தாலும் தவறில்லை. நன்மைக்கே. ஆனால் எதுவும் நிகழாமல் இருப்பதே தவறு.

எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் மனம் சலனமின்றி நம் குறிக்கோளை நோக்கிப் பயணித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

Continously Move towards your goal with detached attachment like a wheel.

எனக்கு என் நுரையீரல் பிடிக்கவில்லை; என் கணையம் எனக்குப் பிடிக்கவில்லை என்றெல்லாம் நாம் வருத்தப்பட முடியுமா...? அடுத்து என்ன என்று எண்ணி அடுத்த நிகழ்வினை நோக்கிப் பயணிப்போம்.

எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும் எந்த உணர்வுகளுக்கும் அடிமையாகிட வேண்டாம். அதற்காக மனம் இரும்பாக இருக்க வேண்டும் என்ற அர்த்தமல்ல.

இக்கட்டான சூழ்நிலையில் புத்திசாலித்தனமாகச் செயல்படவேண்டும்.இங்கே மிஸ்டர் எக்ஸ் , மிஸ்டர் வொய் எப்படி கீழிருக்கும் சம்பவத்தினை எதிர்கொள்கின்றனர் எனப் பார்க்கலாம்.

உதாரணமாக நாம் எதிர்பாராவிதமாக ஒரு விபத்தினைச் சந்திக்கின்றோம். நல்ல பலத்த அடி. உடன் வந்தவர் உங்கள் உயிர் காதலி.

இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்...?

மிஸ்டர் எக்ஸ் சின் நிலைப்பாடு:

ஐயோ என் காதலிக்கு இப்படி ஆகிவிட்டதே...? ஐயகோ இனி நான் என் செய்வேன்...? எனக்கு மட்டும் ஏன் இப்படி வருகின்றது...? என ஒரு ஆர்ட் ஃபிலிம் ரேஞ்சுக்கு கண்ணீர் சிந்துகின்றான். மேலும் சூழலையும் நிகழ்வுகளையும் மோசமடையச் செய்கின்றான்.

மாறாக மிஸ்டர் வொய்:,

ஆல்ரைட்.. இப்பொழுது ஆக்ஸிடெண்ட் ஆகிவிட்டது. அடுத்து என்ன செய்வது...?

தன்னால் முடிந்த முதலுதவி. உடனே ஒரு ஆம்புலன்சுக்கு எமர்ஜென்சி கால்.

சுற்றுப்புறத்தை உதவிக்கு அழைக்கின்றான்.

சூழல் மாறுகின்றது.

காதலி தக்க நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் விரைவில் காப்பாற்றப்படுகின்றார்.

அன்பான அரவணைப்பில் விரைவில் குணமடைகின்றார்.

மிஸ்டர் வொய்யே தன் காதலியின் மீது உண்மையான காதல் வைத்திருப்பதாய் உள்ளது... செயல் செயல்....

ஆனால் நாம் அழவில்லையென்றால் அவள் நம்மைத் தப்பாக நினைப்பாளே என்றுதான் நம்மில் அநேகர் உணர்ச்சிகளுக்கு முதலிடம் தருகின்றோம்.


சில நிகழ்வுகள் நம் கையிலில்லை.

அதை நாம் பக்குவத்டன் ஏற்றுக்கொள்ளும் மனோநிலை வரப்பெற்றவராய் இருக்கவேண்டும்.

நான் குள்ளம். புல்லப்ஸ் சிரசானம் மருத்துவம் என எல்லாம் முயன்றும் பலன் பூஜ்ஜியம். என்னை மட்டும் ஏன் இறைவன் அமிதாப் மாதிரி உயரமாகப் படைக்கவில்லை எனப் புலம்புவது எப்படி நியாயம்...?

இது பாரம்பரியம். ஓகே இதுதான் என்னியல்பு என்று ஏற்றுக்கொள்ளும் அந்த மனோபாவம் இருக்கின்றதே... அப்பொழுது மனம் இலேசாகின்றது....

அதற்கு பரிகாரம் என்ன...? அடுத்த ஜெனரேஷனை உயரமாக வளர்க்க ஜப்பானில் ஒரு ஆராய்ச்சி. புரதத்தினை ஒரு சரியான விகிதத்திலே பயன்படுத்தி உயரத்தினை மாற்ற முயற்சிக்கின்றனர். இன்னும் ஒரு ஐந்தாறு தலைமுறையில் ஜப்பானியர்களின் உயரம் உயரும்.

இப்படியெல்லாம் சொல்வதற்காக, "நீங்கள் என்னிடத்தில் இருந்து பார்த்தால் புரியும்...உங்களுக்கு இது மாதிரியான கஷ்டம் வந்ததில்லை.. அதனால்தான் நீங்கள் அட்வைஸ் செய்கின்றீர்கள்...." எனக் கேட்கலாம்.

நானும் இந்தப் பிரச்சினைகளையெல்லாம் கடந்துதான் வந்தேன். ஒரே ஒரு வித்தியாசம் என் வாழ்வில் துரதிர்ஷ்டவசமாய் காதல் மட்டும் வரவில்லை...

மற்றபடி இதேபோல் ப்ரபசர் டார்ச்சர்... இழுத்தடித்தல்... மார்க் குறைத்தல் என்ற எல்லா அனுபவமும் எனக்கும் ஏற்பட்டிருக்கின்றது.

பல்கலையில் ஒரு பாடவேளையில் ஆழ்ந்து லயித்துக்கொண்டிருந்த பொழுது என்னை வளர்த்த என் பெரியம்மா அவர்களின் மரணச்செய்தி... இதே போல் கொள்ளி போட முடியா சூழல்... அவருக்கு நான் மட்டுமே ஒரே வளர்ப்பு மகன்... அவருடைய இறுதி ஆசையே நான் கொள்ளி வைக்கவேண்டுமென்ற சிவாவின் பாட்டி போன்ற அதே ஆசை...

வருத்தம் இருந்தது . ஆனாலும் நான் அழவில்லையே...! ஆல் ரைட் அவரது பயணம் முடிவடைந்தது. அப்பொழுதுதான் என்னுள் ஏற்கெனவே இருந்த அந்த சகபயணி என்ற தத்துவம் இன்னும் ஆழமாய் வேரூன்றியது.


நாமனைவரும் யார்...? ஒரே இரயிலில் ஒரே கூபேயில் பயணிக்கும் சகபயனிகள் அவ்வளவே...

என் நிறுத்தம் வந்தால் நான் இறங்கிவிடுவேன், உங்கள் நிறுத்தம் வந்தால் நீங்கள் இறங்கி விடுவீர்கள். அது அம்மாவாயினும் சரி மனைவியாயினும் சரி...குழந்தையாயினும் சரி...நாமனைவரும் சக பயணிகள்தான். பயணம் முடியும்வரை அனைவருடன் இணக்கமாய் நட்புடன் பிறருக்கு உதவிக்கொண்டு மகிழ்ச்சியாய் நம் பயணத்தினைத் தொடர்வோம்...

Saturday, June 23, 2007

கடவுள் ஒரு சந்தேகம் by தியாகு

அன்புள்ள தியாகு,

கடவுள் உருவமற்றவர்.

ஆனால் மனிதனின் மனம் எதையுமே படமாகப் பார்க்கப் பழக்கப்பட்டிருக்கின்றது.

உதாரணமாக நான் ஃபேன் என்றால் உங்கள் மனதில் F A N என்ற எழுத்துக்கள் வருவதில்லை. மாறாக ஒரு காற்றாடி விட்டத்தில் சுழல்வதே உங்கள் மனதினில் வரும்.

டைப் மெஷின் என்றவுடன் உங்கள் மனதில் டைப் மெஷின் மட்டும் வருவதில்லை. அத்துடன் டேபிள் நாற்காலியும் மனதில் வரும். சிலருக்கு டைப் அடிக்கும் மங்கையே நினைவிற்கு வரலாம்....! :) :) :)

மனம் படங்களாய் பார்ப்பதால், கடவுளையும் நம் வசதிக்கேற்ப உருவங்களாய் படைத்தோம். கல்விக்கு ஒரு சரஸ்வதி, ஹயக்ரீவர்; செல்வத்திற்கு ஒரு திருப்பதி, லஷ்மி; வீரத்திற்கு ஒரு முருகன்; விவேகத்திற்கு ஒரு கிருஷ்ணன் என அவரவர் தேவைக்கேற்ப கடவுளர்கள் உருவாக்கப்பட்டனர்.

சரஸ்வதியை எண்ணி சரஸ்வதி காயத்திரி உச்சரிக்கும் பொழுது மனம் அறிவை நோக்கி Tune செய்யப் பழக்கப்படுத்தப்படுகின்றது. பணம் வேண்டுமா...? லஷ்மியை வணங்கு.... வீரமா முருகன்... இப்படி நம் மனதினை அந்தந்த லட்சியத்திற்கேற்ப இணைக்கும் ஒரு எளிதான அருமையான உபாயமே கோவிலும் பக்தியும்.

நம் மனதில் எதை ஊறப்போடுகின்றோமோ நாம் நம்மையறியாமலேயே அதை நோக்கி நகர ஆரம்பிக்கின்றோம்.

கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பது சுத்தவெளியே. அதாவது எதுவுமற்ற ஒரு Empty Space; Absolute Free Space; Even there is no mue meson particles....But Free Space contains Planum,Power and Wisdom.

ஐன்ஸ்டீனின் ஆற்றல் நிறை சமன்பாட்டின்படி E=MC^2 ஆற்றலை நிறையாகவோ நிறையை ஆற்றலாகவோ மாற்ற இயலும். முதலிலிருந்த ஆதி நிலையானது(Empty Space) சூழ்ந்தழுத்தம் ஆற்றலால் (Self Compressive Force) வெற்றிடம் குழிந்து சுழல ஆரம்பிக்கின்றது. அது ஒரு பருப்பொருளாகக் காட்சியளிக்கின்றது. இதுவே Fundamental Particle. இதன் கூட்டே பஞ்ச பூதங்கள்.

இந்த துகளின் ஆரம் 10 ^ - 47 mm கொண்ட ஒரு நுண்துகள்,ஆற்றலானது இப்படி 10 ^ -57 விநாடிகளில் வெடித்து நிறையாக மாற்றப்படுகின்றது என Big Bang Thoery யில் படிக்கின்றோம். அப்படியே பல பருப்பொருட்கள் உருவாகி ஆற்றலின் காரணமாக இயங்க ஆரம்பிக்கின்றது. (Planum, Power, Wisdom என்ற 3 திறன்கள் இயற்கை கொண்டது என ஏற்கெனவே பார்த்திருக்கின்றோம்.)

நியூட்டனின் Law of Attraction/Repulsion Theory யின் படி F = GMm / R ^ 2 தன்னையொத்த பருப்பொருட்களை ஈர்த்தும் விலக்கியும் கொண்டு மிகப்பெரிய பருப்பொருட்களை உருவாக்குகின்றன. அவைகளுக்கிடையேயுள்ள கவர்ச்சி மற்றும் விலக்கு விசையால் ஒரு ஒழுங்கில் இயங்க ஆரம்பிக்கின்றன. அதாவது சுழல ஆரம்பிக்கின்றன.

இந்த இயக்கத்திற்கு விஷ்ணு என்று பெயரிடுகின்றனர். அந்த அமைதியான ஆதி நிலைக்கு சிவன் என பெயரிட்டனர். நீங்கள் கூட கேள்விப்பட்டிருப்பீர்கள்,, " செவனே னு இருக்றேனே.... என்னை ஏம்ப்பா வம்புக்கு இழுக்கிறே..." சிவன் ஆதி நிலை; அமைதிநிலை. மரணத்தில் அமைதியடைவதால் சிவன் அந்தப் பொறுப்பை வகிப்பதாய் சொல்கின்றனர்.

உருவாகுதல் என்று எதுவும் இல்லை; ஒன்று இன்னொன்றாகப் பரிணமிக்கின்றது. இன்னொன்றாக மாற்றமடைகின்றது. கார்ல் மார்க்ஸ் தன்னுடைய தாஸ் காபிடலில் முதல் பக்கத்தில், " இந்தப் பிரபஞ்சத்தில் மாற்றத்தைத் தவிர எல்லாமே மாறுதலுக்குட்பட்டது...." என்று சொல்கின்றார்.

ஆனால் அவர் மட்டும் Physics படித்திருந்தால், Change is also subjected into Change by means of accleration என்று புரிந்திருப்பார்.

திருவள்ளுவர் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற குரலில் அழகாய் விளக்கியிருக்கின்றார் ஆதிநிலையைப் பற்றி... இருப்பு நிலையைப் பற்றி; சிவகலத்தைப் பற்றி...

ஆனால் அதற்கு உரை எழுதிய பரிமேழலகரோ அல்லது மு.வா வோ எல்லாவற்றிற்கும் முதற்பொருள் இறைவனே எனவே அவனை வணங்குவோம் ...என சுருக்கமாக சொல்லிவிட்டனர். சரியான உட்பொருளைச் சொல்லவில்லை.

ஆனாலும் இந்தக் கடவுள் விஷயத்தில் யாருக்கும் எதுவும் முழுதுமாகத் தெரியாது என்பதே நிஜம். எனவே இதைப் பற்றியெல்லாம் அதிகமாய் கவலைப்படாமல் எப்பொழுதும் போல் இருக்கவும்...

இல்லையென்றால் நீங்களே ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துக் கொள்ளவும். யார் விளக்கம் சொன்னாலும் அது சரியாக இருக்காது. எனவே இந்த விஷயத்தில் அவரவர்களே இறைவன் என்பது யார்,...? என வினாவினை எழுப்பி ஆராய்ச்சி செய்துகொள்ளவும்...அதுதான் சரியாக இருக்கும்...

இராவணனுக்கு 10 தலைகள் என்பது 10 கெட்ட குணங்கள் என உருவகப்படுத்துவது அந்த சொல்லும் நபருக்கு எவை எவை கெட்ட குணங்கள் என நினனத்தாரோ அதில் ஒரு 10 கெட்ட குணங்களை Prioritise செய்திருப்பார்.

மூலஸ்தானம் இருட்டாகத்தான் இருக்கவேண்டும். சிவநிலைத் தத்துவத்தை விளக்க. ஆனால் இன்று ஒளிர்வது மெர்க்குரி லேம்ப் நண்பா...மெர்க்குரி லேம்ப் நண்பா....! காலப்போக்கில் நாம் தவறாகப் புரிந்துகொள்கின்றோம்.

ஆனால் என்னைப்பொறுத்தவரை கோயில் ஒரு அருமையான நம்மை நல்வழிப்படுத்தும் ஒரு நல்ல சாதனமே... எனக்கும் என் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறையவே இந்த விரதங்களும் மந்திரங்களும் என் சின்ன வயதில் நல்ல பலன்களைக் கொடுத்தது. பின்னர் யோகாவிற்கு மாறியபின் பக்தியோகத்தில் ஏனோ அவ்வளவு மனம் லயிக்கவில்லை....

ஆனாலும் நான் என் சின்ன வயதில் கடவுளர்களைப் பயத்தாலோ அல்லது மரியாதையாலோ வணங்கவில்லை... ஒரு நண்பனைப் போல்தான் பார்க்கமுடிந்தது....வேண்டுதலுக்கும் பலன் இருந்தது...

என்னுடைய ஆறாம் வகுப்பு வரை இருந்தத் திக்குவாய் பக்தி வழிபாட்டில்(வைணவம்) தொடர்ந்த பிரார்த்தனையின் காரணமாக திக்குவாய் முழுதுமாகக் குணமான அதிசயமும், சின்னவயதினில் என்னால் படிக்கவே இயலாத நிலையிலிருந்த நிலையும் மாறி நிறைய ஞாபக சக்தியும்
வேகமாகக் கிரகிக்கும் திறனும் வரப்பெற்ற அதிசயங்களும் நிகழ்ந்திருக்கின்றன. அதன்பின்னர் மேடையில் பேசி பரிசுகள் வாங்கியதெல்லாம் என்னாலேயே நினைத்துப் பார்க்கமுடியவில்லை...!

இதெல்லாம் மனோவியலின் விதிகளில் பொருத்திப்பார்த்தால் நம்பிக்கை என்ற விடை கிடைக்கின்றது.

கோயிலும் அதன் கான்செப்ட்டும் மூட நம்பிக்கையாகவே இருக்கட்டும். அதனால் நன்மைகள் நிகழ்ந்தால் சரிதான். நிகழாவிட்டாலும் அதனால் ஒன்றும் நட்டமில்லை.

மூடநம்பிக்கையாய் இருக்கும் பலியிடல் போன்றவைகளைத் தவிர்க்கலாம்.

இவையெல்லாம் என் நம்பிக்கைகளே...இவையெல்லாம் சரியாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை.

ஒருவனுக்கு சரியாக இருப்பது இன்னொருவருக்கு சரியாக இருப்பதில்லை. எல்லாம் Frame of reference... சமுதாயத்திற்கு தீங்கு செய்யும் ஒரு மிகப்பெரிய கொடியவனை நான் கொன்றால் அது கொலை என்று சட்டம் எனக்குத் தண்டனை அளிக்கும்; இதே இரவீந்திரன் இராணுவத்தில் சேர்ந்து போரில் எதிரிநாட்டைச் சார்ந்த முகம் தெரியாத எதிரிகளை 1000 பேர்களைக் கொன்றால் வீரன் என்று கெளரவிக்கின்றது...

மொத்தத்தில் கொலை கொலைதான். ஒரு உயிரைக் கொன்றால் தூக்கு; 1000 பேரைக்கொன்றால் பதக்கம்....எல்லாம் Frame of Reference...! மனிதன் இந்த மாயையில் சிக்குண்டதால் அவனால் உண்மையான மெய்ப்பொருளைக் காண முடிவதில்லை....

எப்பொருள் யார்யார்வாய்க்கேட்பினும் மெய்ப்பொருள் காண்போம்...

Thursday, June 7, 2007

ஒரு ஆசிரியன்

செல்வன் <> hide details 6:16 pm (5 hours ago)
reply-to muththamiz@googlegroups.com
to muththamiz@googlegroups.com
date Jun 7, 2007 6:16 PM
subject [muththamiz] Re: ஒரு ஆசிரியன் கற்றது
mailed-by googlegroups.com

சுரேஷ்

கல்வித்துறையில் நிலவும் வருத்தமான நிலவரம் இதுதான்....ஆசிரியர் நிலவரம் இன்று மிக வேதனையான விசயம்.. மற்ற பலதுறைகளில் இதே போல்தான் நடக்கிறது. மனிதவளத்தை இப்படி துச்சமாக நினைத்தால் அவன் ஏன் வெளிநாட்டுக்கு ஓடமாட்டான்??


On 6/7/07, sweetsuresh <> wrote:
2003ல் கடுமையான வறட்சி வந்து வருமானத்துக்கே வழி இல்லாம நான்
பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைக்கு முயன்ற போது எனக்கு அவர்கள் தர
ஒப்புக் கொண்டது வெறும் 1500ரூ மட்டுமே. அதிலும் தினமும் 30 கிலோமீட்டர்
நான் சென்று வரவேண்டி இருந்தது.

நான் ஒரு 2000 மாவது கொடுங்கள் என்றபோது 1500க்கே நிறையபேர் தயாரா
இருக்காங்க. நீங்க நல்லா நடத்தறீங்கன்னுதான் உங்க தேர்வு
பண்ணியிருக்கிறோம் அப்படின்னாங்க.

-சுரேஷ்பாபு

On Jun 7, 9:47 am, "செல்வன்" wrote:
> தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு கிடையாது. சம்பளமும் குறைவு.







--
செல்வன்


http://groups.google.com/group/muththamiz


தனிமடல் தொடர்புக்கு: holyape@gmail.com
--~--~---------~--~----~------------~-------~--~----~

- Show quoted text -
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---




Reply Forward Invite செல்வன் to chat






விஜி சுதன் செல்வன் அண்ணா, உங்க கதையைப்பார்த்தால் திரைப்படங்களில் எல்லாம் மிகைப்படக் காட்...
8:14 pm (3 hours ago)



Reply
Reply to all
Forward
Print
Add Raveendran to Contacts list
Delete this message
Report phishing
Show original
Message text garbled?
Raveendran Krishnasamy to muththamiz
show details 11:16 pm (4 minutes ago)




On 6/7/07, விஜி சுதன் <> wrote:
நானும் அப்படி அல்லவா நினைத்திருந்தேன்....உங்க கதையெல்லாம் கேட்கும் போது தப்பிச்சோம்டா சாமின்னு இருக்கு" ஏனெனில் ஆசிரியர் தொழில் நான் மிக நேசிக்கும் மதிக்கும் தொழில்...

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஆனால் நான் ஆசிரியர் தொழிலை துளித்துளியாய் ரசித்து அதுவே ஒரு ஜென் மெடிட்டேஷன் மாதிரி பண்ணினேன்... பாடம் நடத்துவதில் நேரம் போவதே தெரியாமல் மாணவர்களே லயித்துப் போயினர்.

எந்த மாணவ மாணவிகளாவது பெளதிகத்திற்கு ஸ்பெஷல் கிளாஸ் வைக்கச் சொல்லிக் கேட்டிருக்கின்றீர்களா....?

ஆனால் என் மாணவர்கள் அவ்வளவு ஆர்வமாய் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட பாடம் நடத்தும்படி மிகவும் ஆசையாய் கேட்டுக்கொண்டனர்.

பாடமே அவர்களுக்கு ஒரு சினிமா டைரக்டர் தன் படத்தை எப்படி டைரக்ட் பண்ணுவாரோ அது போல் முன்னிரவு நல்ல ஹோம் ஒர்க் பண்ணிவிட்டு நானே என் சொந்த செலவில் Teaching Aids மாதிரிகளை உருவாக்கி நடத்தியதில் நல்ல பலன்....


துறைத் தலைவர் இரத்தினசாமியின் உண்மையான ஆர்வமும் உற்சாகமும் பல்கலை ரேங்க்குகள் வரிசையாகக் குவிய காரணமாக அமைந்தது.

எம்.ஐ.டி.யில் B.Sc Physics/Maths/Chemistry முடித்தவர்களுக்கு மட்டுமே அப்பொழுது B.Tech admission அங்கே இருந்தது...

எங்கள் கல்லூரியில் பெளதிகத் துறைக்கு மட்டுமே அங்கே வருடா வருடம் தனியாக ஒரு கோட்டா உருவாக்கியது போல் எங்கள் மாணவர்கள் அங்கே எளிதாக சென்றைடவர்.

துறைத் தலைவரைவிட நான் பாடம் நடத்துவதில் மாணவர்கள் அதிகமாய் ஆர்வம் காட்டலானார்கள். எந்த வாத்தியாராவது வராவிட்டால் என்னை அழைத்துச் சென்று அறிவியலைப் பற்றி பேசச் சொல்வார்கள்.


நானும் இதுதான் சமயம் என பிரபஞ்ச இயக்கத்திலிருந்து எடுத்துவிடுவேன். ஆகாயம், விண்வெளி, கோள்கள், பால்வளி மண்டலம், ஆண்ட்ரமீடா கேலக்ஸி, எம்80, எ89 காலக்ஸி, இந்தப் பிரபஞ்சத்தில் நாம் மட்டும்தான் இருக்கின்றோமா....? நாம் பிறப்பிற்கு முன்னால் எங்கிருந்தோம்...? மரணத்திற்குப் பின் நிலை என்ன...? உயிர் என்றால் என்ன...? இப்படி படிப்படியாக சுவாரஸ்யமாக யோகா தவம் என்று கொண்டு வந்துவிடுவேன்...

ஏறக்குறைய என் மாணவ மாணவிகள் என் தாக்கத்தின் காரணமாக சினம் கொள்வதைத் தவிர்த்தனர். நட்பு நலம் பாராட்டினர். வீட்டில் கூட அவர்களது பெற்றோர்கள் என்னைத் தனியாகத் தேடி வந்து, "என் பையன் இப்போ ரொம்ப நல்ல பையனா மாறிட்டான்... உங்களைத் தான் சொல்றான்" என்றோ அல்லது "என் பொண்ணு இப்போ அம்மாவுக்கு சொல்லாமலே ரொம்ப உதவி செய்றா...நல்ல மாற்றம்..." என்றோ சொல்லிப் பாராட்டிவிட்டுச் செல்லும்பொழுது, "அட நம்மால் கூட 4 பேருக்கு ப்ரயோஜனமா இருக்கும் போலிருக்கே.." ன்னு ஒரு நோபல் பரிசு கிடைச்ச சந்தோஷம் கிடைக்கும்...


Science Forum ஒன்னு ஆரம்பிச்சி மாணவ மாணவிகளை முழுமையாக ஆராய்ச்சி மனப்பான்மைக்கு மாறி ஏன் எதற்கு எப்படி என்று கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் எங்கள் ஊரில் எங்கள் பேராசிரியர்களின் உதவியால் தொடங்கி வெவ்வேறு துறையைச் சார்ந்த வெவ்வேறு கல்லூரி பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் என ஒரு பெரிய பரபரப்பே பண்ணினோம்...

சென்னையிலுள்ள சில Film Society யில் மெம்பராகி விஞ்ஞான ஆராய்ச்சி டாக்குமெண்டரிகளை Audio-Visual Education என்னும் துறையையும் கையெலெடுத்துக்கொண்டு அங்கே மாதத்திற்கு இரண்டு மூன்று படங்களைத் திரையிட்டோம்....

அது ஒரு கனாக் காலம்....!

அருப்புக்கோட்டை மாணவ மாணவிகளும் எனக்கு நல்விதமாய் ஒத்துழைத்தனர். ஆனால் சென்னையில் நேர் எதிரான அனுபவம் ஏற்பட்டது.
அதுவே என்னை மேலே மேல் படிப்புப் படிக்கத்தூண்டி எண்ட்ரன்ஸ் எக்ஸாமில் நல்ல ஸ்கோர் வாங்கி சீட் பிடிக்க தூண்டுகோலாய் அமைந்து கணணித் துறைக்கு இழுத்துச் சென்றது....

இப்பொழுதும் எனக்குக் கணிப்பானியலைவிட பெளதிகமே ஆழ்மனதில் அமர்ந்திருக்கின்றது... இப்படித்தான் நமக்கு எது பிடிக்கின்றதோ அதில் ஈடுபட முடியாமல் கேவலம் சமுதாய ரெக்ககனைசைனுக்காக நாம் தடம் புரள வேண்டியிருக்கின்றது.....!

பேராசானுக்குரிய ஒரு மதிப்பும் முழு ஊதியமும் வேலை நிரந்தரமும் இருந்திட்டால் நான் ஏன் சிலிக்கான் வேலிக்குப் பயணிக்கப்போகின்றேன்...?

சிவசிவா என்று

Properties of Matter by Raveendram Krishnasamy
Heat and Thermodynamics by Raveendran Krishansamy
Electro Magnetic Theory by Raveendran Krishansamy
ABC of Electronics by Raveendran Krishanasamy
Introduction to Micro Processor by Raveendran Krishnasamy
Computer Organisation and Assembly Language Programming by RK
Industrial Electronics by Raveendran Krishnasamy
Physics in Day to Day Life by Raveendran Krishnasamy
Plasma Physics by Raveendran Krishnasamy

என்று எத்தனையோ புத்தகங்கள் படைத்திருப்பேனே.... ! என்றாவதொரு நாள் படிப்படியாய் ஐன்ஸ்டீனாய் மாறி உலகையே திரும்பிப்பார்க்க வைத்திருப்பேனே...!

நாலு பேருக்காக நாம் தடம் புரள வேண்டியிருக்கின்றது....வீட்டிலோ அமெரிக்காவில் பணம் சம்பாதிப்பதையே பிறவிப்பயனாய் கருதும் சமுதாயம்... அவ்வளவு ஏன் கல்யாணத்திற்குப் பெண் பார்க்கும் போது கூட பையன், "அமெரிக்காவா....?"

என்ன உலகமடா இது... நான் நல்லவன்; குடி இல்லை; சிகரெட் இல்லை; சூதுவாது இல்லை; கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லை; கெட்ட எண்ணங்கள் எதுவும் இல்லை என்றால் தரகன் கூட ,"இது தேறாத கேஸ்..." என கமெண்ட் அடிக்கின்றானே....?

அட நான் எதையோ ஆரம்பித்து எழுத்து கன்னாபின்னா வென எங்கெங்கோ கட்டுப்பாடின்றி செல்கின்றதே....?

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>..





On



--
என்றென்றும்
சுதனின் விஜி
--~--~---------~--~----~------------~-------~--~----~

முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---





- Hide quoted text -

--
அன்புடன்
சக பயணி
ரிஷி ரவீந்திரன் www.rishiraveendran.tk

"Yadbhavam....thadbhavathy....."
"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்..."
"Yadrusee Bhavanayasya....Siddirbhava thadrusee...."
"நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது......."
"Ya mathigi...Sa gathigi...."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."