Saturday, July 7, 2007

ராவணன்

அன்புள்ள ஷைலஜாக்கா அவர்களுக்கு,

நான் காலையில் உடனே உங்களுக்கு பதில் எழுத முடியா பளுயிருந்ததால் இப்பொழுது பதிகின்றேன்.

சுந்தர காண்டத்தில் முதல் ஸர்க்கமே இப்படித்தான் இருக்கின்றது...

"ததோ ராவண நீதாயா: ஸீதாயா: ஸத்ருகர்ஸந:|
இயேஷ பத*மந்வேஷ்டும் சாரணாசரிதே பதி2 ||"

பகவான் யாவற்றைக் காட்டிலும் மேலானவர் என்பதற்கு அடையாளமான எண்ணிறந்த கல்யாண குனங்கள் அவரிடத்தில் விளங்குகின்றன என்று கிஷ்கிந்தா காண்டத்தில் சொல்லப்பட்டது.

பதினைந்தாவது ஸர்க்கத்தில் "ராமனை விரோதித்துக்கொண்டவனை, ராமனால் கொல்லத் தகுந்தவனை, பிரஹ்மா, ருத்திரன், இந்திரன் முதலியவர்களும் காப்பாற்ற முடியாது" என்பதால் இது நன்றாக விளங்குகின்றது.

கிஷ்கிந்தா காண்டத்தில் மித்திரர்களை எப்படியாவது ரட்சிக்க வேண்டும் என்ற தர்மமும், இந்தக் காண்டத்தில் தூதனும் பதிவிரதையும் நடந்துகொள்ளவேண்டிய தர்மமும் சொல்லப்படுகின்றப.

முன் காண்டத்தில் ஸகல லோகங்களையும் ரட்சிக்க அவதரித்த மஹாவிஷ்ணுவுக்கு, ஆசாரியன் என்ற புருஷகாரம்(மத்தியசஸ்தம்) கிடைத்த தென்பதையும், இந்தக் காண்டத்தில் ஆசாரியன் செய்யவேண்டிய காரியத்தையும் வால்மீகி தெரிவிக்கிறார். அதில் முதல் ஸர்க்கத்தில் உபதேசம் பெறத் தகுந்த சிஷ்யனை குரு தேடிப் போவது சொல்லப்படுகின்றது.(கோவிந்த ராஜீயம்.)

ராவண நீதாய: (ராவணனால் கொண்டுபோகப்பட்ட ) என்ற விசேஷணத்தால் ஸீதையின் ஸாத்விகஸ்வரூபம் அக்னி குண்டத்திலும், ராஜஸ்வரூபம் பகவானுடைய வலது புஜத்திலும் என்றும் பிரியாமலிருந்தனவென்றும், தாமஸ் ரூபத்தையே ராவணன் எடுத்துப் போனானென்றும் உட்கருத்து குறிப்பிடப்படுகிறது.

ஆனாலும் தேவனாகட்டும் மனிதனாகட்டும் இதெல்லாம் முதலிலேயே எழுதப்பட்ட Pre Written Codes. These codes are triggered at the right place at the right time. இதைத் தான் விதி என்கின்றோம்.

ராமாயணத்தில் கூட Law of Cause and Effect டே பெரும்பாலும் விளக்கப்பட்டிருக்கின்றது.

இங்கே ராமர் தன் சின்ன வய்தில் பம்பரம் விளையாடியபொழுது பம்பரம் ஒரு வயதான பாட்டி சுமந்து வந்த கஞ்சி களயத்தின் மீது விழுந்து அந்த களயத்தினைத் துளைத்து அதிலிருந்த கஞ்சி சிந்தும்படி ஆகிவிட்டது.

அப்பொழுது அந்த பாட்டி எதிர்பார்த்தது ஒரே ஒரு ஸாரி.... ஆனால் அது கிடைக்காதது மட்டுமின்றி ராமரும் தன் சகாக்களும் சிரித்ததினால் மனதினில் ஒரு அவமானத்தினை உணர்ந்தார்.

ராமருக்கு ராஜ்ஜியம் தரக்கூடாது என்ற ஒரு முடிவு. பதவி ஏற்கும் முன்பு கைகேயியிடம் சென்று பரதனுக்கு முடிசூட்டுவிழா நடத்துமாறும் ராமரை 14 வருடங்கள் காட்டிற்குச் செல்லவேண்டுமென்றும் சாவி கொடுத்தார்.

அன்று(பம்பரம்) நிகழ்ந்தது காரணம். இன்று (முடிசூட்டுவிழா) நிகழ்ந்தது காரியம்.

சூர்ப்பணகையின் மூக்கை அறுத்திருக்க வேண்டியதில்லை. இது வன்முறைதானே....?

இதுதான் விதி என்பது....

இதுதான் Law of Cause and Effect என்பது... அது இறைவனே ஆனாலும் யாரும் இதிலிருந்து தப்ப முடியாது என்பது விதி...கர்மவிதிகள் மிகவும் வலிமையானவை. இறைவனாகவே இருந்தாலும் அதை அனுபவித்தே ஆகவேண்டும் என்பது நியம விதி.

இந்த விதியை மாற்ற முயலுமா என்ற ஆராய்ச்சியில் விளைந்த விளைவே இறை வழிபாடு...

கோயில் ஒரு எளிமையான கருவியே....நம் குறிக்கோள்களை அடைவதற்கு....

அந்தக் குறிக்கோள்கள் நாளை நடக்கப் போகும் ஒரு நேர்முகத்தேர்வாயினும் சரி; அல்லது வீடு பேறு பெறும் குறிக்கோளாகட்டும் எல்லாவற்றிற்கும் பக்தியோ அல்லது தவமோ உதவுகின்றது.

நாம் உருவ வழிபாட்டினை உருவாக்கியது நமது எளிமைக்காகவே....

ராமாயணமும் மகாபாரதமும் ஒரு கற்பனைக் கதை என்பது என் கருத்து.
என்னையும் ராமாயணமும் மகாபாரதமும் செம்மை படுத்தின என்பதினை மறக்க முடியாது என்றாலும் கூட வேதாத்திரி மகரிஷி சொன்னது போல் இவைகள் கட்டுக்கதை என்பதில் நானும் உடன்படுகின்றேன்.

மனிதனை செம்மைப் படுத்த இவைகள் உதவுகின்றன. நான் இப்பொழுதும் கூட அதே சுந்தர காண்டமும் ஏகாதசி விரதமும் கடைபிடிக்கின்றேன். ஏனெனில் அதில் எனக்கு நம்பிக்கையும் இறைத் தன்மையும் இருப்பது என் சின்ன வயதிலேயே பதிக்கப்பட்டது,

என்னுடைய நம்பிக்கை வேறு; உண்மை வேறு;

இன்றிருக்கும் ஹாரிபாட்டர் கதைகள் இனியொரு 300 ஆண்டுகளுக்குப் பிறகு வளரும் சந்ததியினர் இதெல்லாம் நிஜமாகவே நடந்தன என நம்ப நிறைய வாய்ப்பிருக்கின்றன.

அறிஞர் அண்ணாவையும் எம்ஜிஆரையும் அவர்களின் காலத்திற்குப்பின்னால் நாம் அவர்களை ஏறக்குறைய கடவுளாக்கவில்லையா....?

ராவணன் தவத்தில் தலைசிறந்த ஒரு தவயோகி என புராணங்கள் சொல்கின்றன; கம்ப ராமாயணத்தில் இராவணன் தன் நகவிரல் கூட சீதையின் மீது படாமல் கண்ணியமாகவே நடத்தியதாக கம்பன் சொல்கின்றார். சீதை வேறு யாரோ அல்ல; ராவணனின் புத்திரிதானே...?;(இது ஒரு தனிக்கதை..... )

எந்த ஒரு யோகியும் யோகி என்ற நிலையை எட்டியபின் தன்னிலை இழப்பதில்லை. மேலே மேலே என்ற தேடலும் உலக வாழ்க்கையில் பற்றில்லா தன்மையுமே கொண்டவர்களாவர். தவற்றினை உடனே ஒப்புக்கொள்ளும் மனோபாவமும் இவர்களிடத்திலிருக்கும்.

எனவே இந்தக் கதையை யாராவது தமிழறிஞர்களும் தவத்தில் சிறந்த யோகியரும் விளக்கினால் அனைவரும் எளிமையாகப் புரிந்து கொள்ளமுடியும்.

நான் இப்படிச் சொல்வதால் ராமனிடம் எனக்கு ப்ரேமை இல்லை என்ற அர்த்தமல்ல்;

தனிப்பட்ட முறையில் ராமனும் ஆஞ்சநேயரும் எனக்கு நிறைய உதவிகள் இன்றளவும் செய்து கொண்டுதானிருக்கின்றனர்... இவர்கள் என் உன்னதமான கடவுளர்கள்....அதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.

நான் கேட்பது அதில் ஆழ்ந்த புலமை கொண்ட தமிழறிஞர்கள் விளக்கினால் இன்னும் நான் மகிழ்வேன்.