Tuesday, February 6, 2007

கிறுக்கல்கள்

அன்புள்ள நண்பர்களே....

நீங்கள் உங்களுள் ஒரு பய அலாரம் அடிப்பதை உணர்கிறீர்களா...? குறிக்கோளை அடைவதற்காக மிகவும் பிரயத்தனப்பட்டு அதன் பின்னால் ஓடுகிறீர்களா...? எப்பொழுதும் பதட்டமே உங்களை ஆட்கொள்கிறதா...? எப்பொழுதும் பரபரப்பாக உழைத்துவிட்டு அதன் முடிவு பூஜ்யமாக இருக்கிறதா...?

குறிக்கோளை நிர்ணயித்த நேரத்திற்குள்ளாகவே அடையாமல் நீண்ட சிரமம் பட வேண்டியிருக்கிறதா...? எல்லாமே Mesh up ( இதற்கும் தமிழில் மொழி பெருங்களேன் யாராவது...) ஆகி இக்கட்டான சூழலுக்குள் தள்ளப்படுகின்றீர்களா...? வாழ்க்கை உங்கள் கையை மீறிப்போய்க்கொண்டிருப்பதாய் உணர்கிறீர்களா...?

உங்கள் முதுகிற்குப் பின்னால் புறம் பேசப்படுவதை உணர்ந்திருக்கின்றீர்களா...? எப்பொழுதும் பற்றாக்குறையே ஏற்படுகின்றதா...? ஒன்றுக்கும் உதவாக்கரை என்ற எண்ணம் எப்பொழுதாவது வருகின்றதா...? தொட்டதெல்லாம் தோல்வியில் முடிகின்றதா...? உங்கள் அகமும் புறமும் ஒத்திசைவாய் இல்லை என்று உணர்கின்றீர்களா...? பிறர் உங்களை அவமானப் படுத்துவதாய் உணர்கிறீர்களா...?

அப்படியாயின் நான் இது குறித்து இங்கே என் சிந்தனைகளை உங்கள் அனுமதியுடன் பயணிக்க விடலாமா...?

அதற்கு முன் ஒரு சிறு நிகழ்வைக் குறிப்பிட்டுவிட்டுத் தொடரலாம்...

எங்க காலேஜ்ல அதுதான் கடேசி செமஸ்டர். மல்லிகார்ஜுனன் ற வேதியியல் புரபஸர் ரொம்ப வேக வேகமா பாடம் நடத்திட்ருந்தார். அவரோட பயம் அவருக்கு.... இந்த பய புள்ளக எப்ப ஸ்ட்ரைக் பண்ணுவாகளோ இல்ல இந்த SBK College (இது நம்ம விபாகை படிச்ச காலேஜ்... நாம் படிச்சது DA College) பயக ஸ்ட்ரைக் பண்ணிட்டு இந்தக் களவானிப்பசங்களயும் கூப்டுவாய்ங்களோ... இல்ல எப்ப தியேட்டர்ல புதுப்படம் போடுவாங்களோ அதுக்கு எதாவது ஒரு காரணம் சொல்லி ஸ்ட்ரைக் அடிப்பாகளோ, நாம் என்னக்கி சிலபஸ் முடிக்றது ன்னு ஒரு பயம்...நாயமான பயந்தானே...?

ரொம்ப வேகவேகமா பாடம் நடத்திட்ருந்தார்.... போர்டுல வேதிச்சமன்பாடு எழுதிட்ருந்தார்.

நாம எப்பவும் போல கடேசி

(மொத பெஞ்சுல சின்னப்பசங்களும் பெண்பிள்ளகளும் இருப்பாங்க...எங்கள மாரி படிப்பு வ்ராத பயகள்ளாம் வாத்தியார் கேள்வி கேக்கக்கூடாது ன்னே கடேசில ஒக்காருவோம்...ஆனா பாருங்களேன் அப்பவும் நம்மலதான் கரெட்டா கேள்வி கேட்டு இம்சை பண்ணுவாங்க...பொம்பளப்பிள்ளகளுக்கு முன்னாடியே வேணுமின்னே அவமானப் படுத்துவாங்க எல்லா வாத்தியாரும்...நம்ம கெரகம் அப்டின்னு நெனச்சுக்குவேன்...)

பெஞ்சுல "ஙே" ன்னு முழிச்சிக்கிட்டே தூங்கிட்ருந்தேன். தூரத்லருந்து பாத்தா ரொம்ப கவனமா பாடத்த கவனிக்ற மாரி இருக்கும். ஆனா நாம தூங்கிட்ருப்போம் ரொம்ப டெக்னிக்கா... அப்பப்ப எந்திரிச்சி, "சார் நீங்க நடத்னது புரியல... இன்னொருவாட்டி சொன்னா நல்லாருக்கும்..." னு ரொம்ப அக்கறையா கேட்டு வப்போம்... ஏன்னா....

1. அவர் நம்மள கேள்வி கேட்டுத் தொலச்சிருவாரு.(எப்பவுமே ரைட்டோ ராங்கோ நாம முந்திக்கிட்டோம் னா நம்ம மேல நாயம் இருக்ற மாரி லோகத்துக்கு தோணுமோ ல்லியோ...? )
2. நாமலும் கிளாஸ்ல தான் இருக்கோம் னு ஒரு அட்டண்டன்ஸ்
3. நாமலும் அக்கறையா கவனிக்றோம் னு ஒரு பில்டப்பு...

வாத்தியார் 4Al + 3 O2 ® 2 Al2O3 (Aluminium + Oxygen ® Aluminium Oxide)


அப்டின்னு போர்ட்ல எழுதிட்ருந்தார். நான் அப்பத்தான் தூக்கத்ல்ருந்து முழிச்சேன்... சரி நாமலும் எதாவது சொல்லிவைப்போம் னு ,சடார் னு எந்திரிச்சி, "சார்... சார்..." னு நின்னேன்...

வாத்தியார், "என்ன...?" ன்னு... கேட்டார்...

"நான் ஒண்ணு கண்டுபிடிச்சிட்டேன் சார்..." னு சொன்னேன்...

வாத்தியாருக்கோ ரொம்ப சந்தோசம்... ஆஹா நம்ம பய நாம் நடத்தி அதுல என்னத்தையோ புதுசா கண்டுபிடிஸ்ட்டானே..."னு சந்தோசம்...

ரொம்ப பெருமையா மத்த பசங்ககிட்ட சொன்னார்...

அவசரமா, "என்ன கண்டுபிடிச்சே...?ன்னு கேட்டார்.

"சார் அலுமினியம் ஆக்ஸைடுல ஆக்ஸிஜன் இருக்கும்போலத் தெரியுது சார்..." னு சொன்னேன்...

அம்புட்டுதான் எல்லாருமே கொல் னு சிரிச்சிட்டாங்க...

எதுக்டா சிரிக்றாங்கன்னே எனக்கு ஒன்னுமே புரியலே...நான் ""ஙே" னு பேந்தப் பேந்த விழிச்சிம் கூட புரியல்லே...

எண்ண அலைகளை, மன அலைகளை அதுக்குத் தகுந்தாற் போல் உயர்த்திக்கொண்டு வினாக்களை விடுக்கலாமே...? இல்லாவிட்டால் நான் அந்த கெமிஸ்ட்ரி புரபஸரை டைவர்ட் பண்ணியது போல இருக்கும்....அதான் நண்பர்களே...வேற ஒன்னும் இல்ல..

No comments: