Sunday, February 11, 2007

லூசுக்கெல்லாம் வெண்ணெய் கொடுக்கமாட்டோம்

இது நிஜமாகவே என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்:

நான் அப்பொழுது எங்கள் கிராமத்திலிருந்து ஒரு 21 கிமீ தொலைவிலுள்ள கல்லூரிக்குத் தினமும் சைக்கிளில் (cycle expedite ட் டுங்க.... அடிக்கடி நண்பர்களுடன் சைக்கிள் யாத்ரா கிளம்பிடுவோம்...கன்யாகுமரிவரை செல்வோம்...) சென்று படித்திக்கொண்டிருந்தேன்.

அப்ப மார்கழி மாசம் ஆரம்பிச்சது. கிடணன் கோயில்ல மறு நா காலைய்ல நெய் பொங்க வெக்கனும் னு சொல்லி ஒரு 100 வெண்ணெய் வாங்கிட்டு வரச்சொன்னாங்க.

சாமிக்கு பண்றதால நல்ல தரமான வெண்ணெய்யா வாங்குடா அம்பின்னு ன்னு நேத்து பொறந்த பொடிசுல இருந்து இப்பவே டிக்கட் எடுக்க ரெடியா இருக்ற பெரியவங்க வரை ஒரே அட்வைசு...(இவங்களுக்கெல்லாம் பேசாம அட்வைஸ் திலகங்கள் னு ஒரு பட்டம் கொடுத்தா எம்புட்டு நல்லாருக்கும்...!)

அங்கன இங்கன னு விசாரிச்சப்ப காதில(KHADI) வாங்குனா நல்லதா கெடைக்கும் னு சொன்னாங்க. சரி னு அங்கன போயி , "ஒரு 100 கெராம் வெண்ணெ கொடுங்க அண்ணாச்சி..."ன்னு கேட்டேன்...

கடக்காரர் மேலயும் கீழயும் என்ன பாத்தார். சரியான பட்டிக்காட்டானா இருப்பானோ னு மனசுக்குள்ள நெனச்சிருப்பார் (அதான் நம்ம மொகத்ல்யே பிரம்மா எழுதி ஒட்டிவெச்சுட்டாருல்ல...!)

"கெடயாது தம்பி..." ன்னார்...

அங்கன , "இங்கே வெண்ணெய் கிடைக்கும்..." னு எழுதியிருந்த போட (board) காட்டி கேட்டேன்.

அவர், "லூசுக்கெல்லாம் நாங்க கொடுக்றதில்லப்பா..." ன்னு சொல்லிட்டார்.

நாம எப்பவும் போல "ஙே" னு முழிச்சிட்ருந்தேன்... வேறென்னத்தச் சொல்ல...

No comments: