இந்தக்குளத்தில் காதல் எறிந்தவர்கள் (10)
ஒரு தலைக் காதல்
எனது கல்லூரியில் படித்த அந்தப்பெண்ணிற்கு பூர்வீகம் செங்கோட்டை. அவளது தந்தை
அரசாங்க அலுவலராக திருநெல்வேலியில் வேலைபார்த்து வந்ததால் இங்கேயே அவளது குடும்பம் செட்டிலாகியது. அவளது பெயர் சமானா.
அவளது கல்லூரியில் படித்த ஒரு சீனியர் பையனை நேசித்தாள். அந்தச் சீனியர் பையன் பெயர் சுபைர். அவன் கல்லூரியில் கவிதை மேடைப்பேச்சு இலக்கியப்பற்றோடும் கிண்டல் - கேலி என்று விளையாட்டுத்தனமாகவும் திரிந்தவன்.
அந்த ஆட்டோகிராப் கூட அவனிடம் நேரடியாக சென்று வாங்க முடியாமல் தன் வகுப்பு தோழனை விட்டு தான் யாரென்று காட்டிக்கொள்ளாமல் வாங்கியிருக்கிறாள்.
>>>>>>>>>>Rishi' Reply இந்த இடத்தில் என் கல்லூரி வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்....
நாம் கல்ல்லூரியின் முதலாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருந்தேன். ஏனோ தெரியவில்லை என் சிறு வயதிலேயே என்னை அறியாமல் பெளதிகத்தில் அளப்பரிய ஆர்வம். + 2 ல் பெளதிகத்தில் நிறைய ஆராய்ச்சிகள் செய்திருந்தேன்....பொறியியல் வேண்டாம் (?) என்று கூறிவிட்டு என் விருப்பப் பாடமான இயற்பியலை நிஜமாகவே நேசத்துடன் எடுத்து பயின்றேன்....
உதாரணமாக ஒரு செமஸ்டரில் Heat and Thermodynamics என்ற ஒரு பேப்பர். அதில் Heat க்கும் Temperature க்கும் உள்ள வேறுபாடு என்ன என்று ஆழ்ந்து ஆராய்ச்சி பண்ணியதில் D.S.Mathur ம் Brijlal Subrahmanyam ம் ஆடிப்போனார்கள். (அந்த செமச்டர் முழுக்க இப்படியே ஆராய்ச்சிசெய்ததலால் தேர்வில் மார்க் போனது என்பது சொல்லியா தெரியணும்...?)
கோவிலும் பெளதிகமும், கராத்தேக் கலையும் பெளதிகமும், இப்படி நிரைய ஆராய்ச்சி செய்து Physics Association ல் உரையாற்றியதில் அந்த பல்கலை முழுதும் பிரபல்யமானேன்....
இளம் விஞ்ஞானி என்றும், Hi Scientist என்றும் ,"இதோ ஐன்ஸ்டினோட வாரிசுடா...." என்றும் அழைக்கப்பட்டேன்....
முதலாம் ஆண்டு முடியும் தருவாய்.
நானும் என் நன்பர்களும் Physics Lab க்குக் கீழே நின்றுகொண்டு Meissner Effect எப்படி Super Conductivity யில் அற்புதமாய் வேலை செய்கிறது என்று விளக்கிக்கொண்டிருந்தேன்....
அப்பொழுது என் வகுப்பறைத் தோழி ஒருத்தி இன்னொரு பெண்ணுடன் எங்களை நோக்கி வந்தாள்.
(நானும் ஒன்னாப்ல இருந்து கடேசியா படிச்ச பெரிய படிப்பு வரைக்கும் எல்லாமே Co-Ed ன்னாலும் ஒரு தடவ கூட எந்தப் பெண்ணோடயும் (College வரைக்கும் தான்) பேசினதே இல்லை...ஏன்னா அப்டியே வளத்துத் தொலச்சிட்டாங்க. என்ன பண்ண...? (அப்றமா மேல படிக்க Univ அப்றம் அதுக்கு மேல ஒரு Ph.D join பண்ணி டிஸ்கண்ட்யூ பண்ணி அப்றம் அதுக்கு மேல ஒரு பெரிய இடத்ல படிப்பு ன்னு போனப்பதான் சரி பெண்களோட பேசலாம் போல.... ன்னே தெரிஞ்சது. ஆனாலும் கூச்சம் மட்டும் போகவே இல்லை... கொஞ்சம் பரவாயில்லாம முன்னேறியாச்சி...
அங் கதைய எங்க விட்டேன்....?
என்னோட கிளாஸ்மேட் பொண்ணு, "இந்த அக்கா உங்களோட பேசணுமாம்.." னு இங்கிலிபீசுல ரொம்ப ஸ்டைலா சொல்லிச்சு.
அவங்கள நான் பாத்த மாதிரியே ஞாபகமில்லை.
கிளாஸ்மேட் பொன்ணுதான், " இவங்க III Year Maths. உங்க ஆட்டோகிராஃப் வேணுமாம்...'னு சொன்னாங்க. எதோ பேர் சொன்னாங்க..சரியா எனக்கு சுழயல்ல.
எனக்கோ ஒரே உற்சாகமும் படபடப்புமா இருந்துச்சு.... பசங்க எல்லாம், "மாப்ளே உனக்கு மச்சம் டா...." னு சொன்னாங்க...
நானும் அவங்க ஆட்டோகிராஃப் ல ," முகம் நக நட்பது நட்பன்று; நெஞ்சத்து அகம் நக நட்ப்தே நட்பு..." னு எழுதினேன். (இது மட்டும் இன்னும் பசுமையா ஞாபகம் வருது...)
அடுத்த செமஸ்டர் வரைக்கும் ஏன் ஃபைனல் வரைக்கும் வாத்தியார் வரைக்கும் ஒரே கேலிதான்...!
கணக்கும் பெளதிகமும் எனக்கு இலகுவாக இருந்தன. படிக்காமலேயே மார்க் வாங்கக்கூடிய பாடங்கள். என்னைப் போல சோம்பேறிகளுக்கு அதுதான் எளிது.
கிராமத்திலிருந்து தமிழ் மீடியம் படித்து வந்தவன். கல்லூரியில் நுழையவும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எல்லாம் ஆங்கிலம். தமிழிலும் ஆங்கிலத்திலும் நாந்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட்...(!?). ஆனாலும் இவர்கள் ஆங்கிலத்தில் பண்ணும் அலப்பறை என்னை வெகுவாய் கவலையடையச் செய்தது....
- Hide quoted text -
>>>>>>>>>>>>......
பின் அந்த சுபைரும் சுமார் ஒரு வருடம் கழித்து அந்த கல்லூரிக்கு ஒரு கவிதைகள் விழா சம்பந்தமாக வந்தபொழுது தன் காதல் சொல்லும் தருணம் இதுதானென்று நினைத்து அவனிடம் தன் வகுப்புத் தோழர்கள் மூலமாக அவள் தன் காதலைத் தெரியப்படுத்த சுபைர் திருப்தியளிக்கும் விதமாய் அவளுக்கு பதிலளிக்கவில்லை.
அவளுடைய காதலின் தீவிரம் அறிந்து அவளது வகுப்புத் தோழன் சுபைரிடம் வந்து அவள் அவனைத் தீவிரமாக விரும்புவதாகவும் உணரச்சிவசப்பட்டு தவறாக முடிவு கூட எடுத்துவிடக்கூடும் என்றும் கூறி சுபைரை அவள் சந்திக்க விரும்புவதாகவும் கூறினான்.
ஆனால் சுபைரோ இன்னொரு பெண்ணை காதலித்துக் கொண்டிருக்கின்றான் அவளிடம் தன் காதலை வெளிப்படையாக சொல்ல முடியாமல் தவிப்புகளில் போராடிக் கொண்டிருந்தான்
காதலை எடுத்துச் சொன்னால்
மறுத்திடுவாளோ என்று
அவள் காதலிப்பாள் என்ற
கற்பனையிலேயே
உயிர்வாழ்கின்றான்.
அந்தச் சூழ்நிலையில் அவனுக்கு தெரியாலையே ஒரு பெண் அவனை தீவிரமாக காதலிப்பது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
காதலித்த பெண்ணுக்காய்
காத்திருந்தான் !
காத்திருந்து ஒருத்தி
காதலித்தாள் !
சுபைரும் அவளை ஒரு நண்பனின் வீட்டில் வைத்து சந்தித்து தான் வேறொரு பெண்ணைக் காதலிக்கின்றேன் என்று முகத்திற்கு நேராக கூறினால் எங்கே மனமொடிந்து தவறான முடிவு எடுத்து விடுவாளோ என்று அவளிடம் நாசூக்காக தனக்கு பல பொறுப்பு இருப்பதாகவும் ஆகவே வாழ்க்கையில் செட்டில் ஆக நாட்கள் ஆகும் எனவும் சில சால்ஜாப்பு காரணங்களை கூறி காலம் சம்மதித்தால் பார்ப்போம் என்று தெளிவாய்க் குழப்பி விட்டு சென்றுவிட்டான்.
பின் வெளிநாட்டில் சுபைருக்கு வேலை கிடைத்துவிட அவன் பறந்துவிட்டான். ஆனால் சமானாவின் காதலோ கசாப்புக்கடைக்குள் சிக்குண்ட ஆடாய் தவித்துக்கொண்டிருந்தது.
சுபைர் சொல்லிவிட்டுப்போன - காலம் சம்மதித்தால் பார்க்கலாம் - என்ற ஒற்றை வார்த்தைகளை வைத்துக்கொண்டு அவன் தன்னை காதலிப்பதாக நினைத்துக்கொண்டு அவனது வீட்டிற்கு தொலைபேசி அடிக்கடி செய்து பேசியிருக்கின்றாள் சுபைரின் நண்பனிடம் அவன் எப்பொழுது திரும்பி வருவான் என்று நச்சரித்திருக்கிறாள்.
இதற்கிடையில் சமானாவின் வீட்டில் அவளின் திருமண ஏற்பாடு செய்யப்பட்டபொழுது அதனை ஒதுக்கி வீட்டில் உள்ளவர்களிடம் உண்மையைக் கூற அவர்களோ சமானாவை அவமானப்படுத்தி அவளின் கண்ணீரை ஒட்டு மொத்தமாய் உருவியிருக்கின்றார்கள். அவளும் முடிந்தவரை போராடியிருக்கின்றாள். சுபைரை தொடர்பு கொள்ள அவளால் முடியவில்லை.
இறுதியாக அவள் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்ய சம்மதித்திருக்கின்றாள். இன்னும் 2 மாதங்களில் அவளுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது.
கடைசியாக அவள் சுபைருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கின்றாள்.
வாழ்வின் எல்லா சந்தர்ப்பத்திலும் சுபைரைக் காண விரும்பியவள்
தன் வாழ்நாளில் இனிமேல் எந்த சந்தர்ப்பத்திலும் இறந்து போனால் கூட அவனை சந்திக்கவே விரும்பவில்லை என்று கடிதம் எழுதி யிருக்கின்றாள்.
சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வந்த சுபைர் அதனை படித்து மிகவும் நொறுங்கிப்போய்விட்டான். தன்னால் ஒரு பெண் இந்த அளவிற்கு மனம் கொதித்துப் போயிருக்கின்றாள் என்பதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளைக் கண்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என துடித்திருக்கின்றான் .
ஆனால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள அவளை மறுபடியும் சென்று சந்திப்பது புத்திசாலித்தனமல்ல என நினைத்து அமைதியாயிருந்திருக்கின்றான் மனதில் எழுந்த காயங்களின் சுனாமி அலைகளை தனக்குள்ளே வாங்கிக்கொண்டு..
அவள் தவறான முடிவு எடுத்துவிடக்கூடாதென்று அவளின் காதலை நாசூக்காய் தவிர்த்த சுபைரின் மீது தவறு இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவன் அந்தப் பெண்ணிடம் தான் இன்னொரு பெண்ணைக் காதலிப்பதாக முதலிலையே கூறியிருந்தால் அவள் தனது காதலை இந்த அளவிற்கு வளர்த்திருக்கமாட்டாள்.
விளையாடிக் காதலியுங்கள்
தயவுசெய்து
காதலோடு விளையாடாதீர்கள்
(இன்னமும் காதலிப்போம்)
- ரசிகவ் ஞானியார்
--
K.Gnaniyar
Dubai
www.nilavunanban.blogspot.
No comments:
Post a Comment