Sunday, February 11, 2007

காதல்

On 2/11/07, vishalam raman wrote:
தந்தை தினம் வருகிறது பல பேர்களுக்கு அதூ வந்து போவதே தெரிவதில்லை , தாய்
தினம் வருகிறது கொஞ்சம் தொலைக்காட்சி மூலமாய் தெரிந்தாலும் "அம்மாவென்றழைகாத
உயிரில்லையே "என்பது போல் ஒரிரண்டு பாட்டுக்களுடன் முடிவடைகின்றன,ஆனால்
இந்தக் காதலர் தினம் ஒரு பத்து நாட்கள் முன்பாகவே சூடு பிடிக்கத் தொடங்கி ஒரு கலக்கல்
கலக்கி விடுகிறது அது ஏன்?

rishi's reply

>>>>>>>>>>>> எனக்கு எந்த ஒரு தினமும் வருவது தெரிவதில்லை. இன்றைய தினம் எப்படி போகும் என்பது மட்டுமே தெரிகிறது. E.Tolle சொல்வது போல் இன்றைய கணத்தில் மட்டுமே கவனம் இருப்பதால் இப்பொழுதில் மட்டுமே கவனம் இருப்பதால் இந்த தினங்களைக் கண்டாலே எனக்கு சிரிப்புத்தான் வருகிறது....

vishalam raman wrote:
நம் நாடு பெற்றோர்களைத் தெய்வமாக மதிக்கும் நாடு தாய் தந்தையைப் பராமரித்து கடைசிவரை அவர்களை பாசத்துடன் பார்த்துக்
கொள்ள வேண்டியது மக்களின் கடமை ஆகையால் தனியாக தாய்,தந்தை தினம் தேவையே

rishi's reply

>>>>> இதெல்லாம் வெள்ளைக்காரனின் ஸ்டைல். அவர்கள் குடும்ப அமைப்பு அப்படி... நாமும் அதை ஏன் கடைபிடிக்கவேண்டும்....? நாம்தான் தினமும் தவம் செய்யும்பொழுது ,

"அன்னைக்கு வணக்கம், தந்தைக்கு வணக்கும், அருள்மிகு ஆசானுக்கு வணக்கம்..." என்று வணங்கிவிட்டுத்தானே அன்றைய நாட்பொழுதைத் துவக்குகிறோம்...? தினமும் பலமுறை அன்னை தந்தையர்களை வணங்குகிறோமல்லவா...?

vishalam raman wrote:

இல்லை நம் மனத்தில் தினமும் அவர்கள் குடியிருக்கிறார்கள் மேல் நாட்டினிலே மகன் ,மகள் 16 வயது வந்தால் தனியாக குடி போகிறார்கள் ,அவர்கள் சுதந்திரத்தில் ஒருவரும் தலை இடுவதை அவர்கள் விரும்புவதில்லை ,,ஆகையால் இந்தத் த்ந்தை தினம் தாய் தினம் என்று அவர்களுக்காக ஒரு நாள் ஒதுக்குகிறார்கள்.

இப்போது காதலர் தினம் நம் முன்னால் வருகிறது நம் நாட்டு கலாசாரம் ,காத்லைப்
புனிதமாக மதிக்கிறது இலை மறைவு தலை மறைவு என்பார்கள் நான் பாரீஸில் போன போது அங்கு தினமும் காதலர் தினமாகத்தான் இருந்தது எவ்வளவு விரசமானக் காட்சிக்ள் !

rishi's reply

>>>>>>> காதல் விரசமானதல்ல அம்மா.... காமம்தான் அப்படி என நினைக்கிறேன்... உண்மையான காதலில் உரையாடல் இல்லை. ஸ்பரிசம் இல்லை... வெறும் அன்பும் அன்பான உணர்வுகளுமே....

நாம் காதல் என்பதையே தவறாகப் புரிந்துகொண்டுள்ளோம்...

ஆண் பெண் இடையே ஏற்படும் ஹார்மோன்களின் வேலையையே சிலர் அப்படி நினைத்து ஏமாந்து போகின்றார்கள்....

உண்மையில் அப்படியெல்லாம் இருப்பதில்லை. ஒரு ஓவியனுக்கு ஓவியத்தில் இருப்பது காதல்; சிற்பிக்கு சிற்பக்கலையில் இருப்பது காதல்; ஒருவனுக்கு பெளதிகம் பிடித்து அதில் ஆராய்ச்சி பண்ணுவதில் இருபப்து காதல்; அதிலேயே பசி பட்டினி எல்லாம் மறைந்து போதல், மறந்து போதல் காதல்;இவர்களுக்கு மனைவி/கணவன் இரண்டாம் பட்சமே...

அதிலேயே லயித்தல்.... அது ஒரு ஆழ்ந்த லயித்தல் நிலைக்கு ஏறக்குறைய ஆழ்ந்த தவ நிலைக்கு அழைத்துச்செல்லும்... இவர்கள் தனியே தவம் செய்யத் தேவையில்லை...!!! ஒவ்வொரு நொடியிலும் அவர்கள் தவத்தில்தான் இருக்கின்றனர்...அதனால்தான் அளப்பறிய முடியாத விஞ்ஞான உண்மைகள்/கண்டுபிடிப்புக்கள் நமக்குக் கிடைத்தன. விஞ்ஞானிகளும் ஏறக்குறைய மெய்ஞானிகளே...!!! விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல...

ஆனாலும் ஆண் பெண் கவர்ச்சி தவிர்க்க முடியாத ஒன்றுதான். இதிலும் ஒரு ஆழ்ந்த லயித்தல் கிடைக்கிறது. உண்மயான காதலும் தவம் போன்றதுதான்... அதன் சரியான அதிர்வலைகள் எத்தனை பேர் அறிந்திருப்பார்கள் எனத் தெரியவில்லை...

இன்றையக் காதலில் ஹார்மோகளின் வேலையே அதிகம். அதனால் எனக்கு இதிலெல்லாம் உடன்பாடில்லை....

உண்மையான காதலில் நான் உடன்படுகிறேன்...

vishalam raman wrote:

நான் தான் என் திசையைத் திருப்பிக் கொண்டேன் ஒரு பத்து வருடங்களாகத்தான்
இது மிகப் பிரபலமடைந்து வருகிறது இதன் காரணமாக உண்மைக் காதல் செழிக்கிறதோ என்னமோ ஆனால் வியாபாரம் செழிக்கிறது ,காதலர் தினத்தை நான் வரவேற்கிறேன்
ஆனால் அந்த அன்பை நல்ல ஆரோக்கிய நிலையில் உபயோகித்தால் அதைவிடச்
சிறந்தது வேறில்லை இந்தத் தினம் அன்பை வெளிப்படுத்த ஆனால் அதை ரசாபாசமாக
உபயோகிப்பதற்கு அல்ல ,இந்தக் காதலின் அர்த்தம் நம் நாட்டில் தவறாகப் புரிந்து கொண்டிருப்பார்களோ என்ற ஐயம் மனதிலே உண்டாகிறது

rishi's reply

>>>>>>>> என் எண்ண ஓட்டங்களும் அப்படியே...<<<<<<<<<<<




--~--~---------~--~----~------------~-------~--~----~
நம்பிக்கை கொள்!
தயக்கம் தகர் !!
வெற்றி நிச்சயம் !!!
-~----------~----~----~----~------~----~------~--~---





--
அன்புடன்
சக பயணி
ரிஷி ரவீந்திரன் www.rishiraveendran.tk

"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்..."
"நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது......."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."

No comments: